கன்னியாகுமரியில் புது வீடு கட்ட ஆசைப்பட்ட சென்னை ஐடி ஊழியர்.. அரசு ஊழியருக்கு மறக்க முடியாத ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள ஏற்றக்கோடு மணலித்தறைவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுபின் புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதிக்காக ஆற்றூர் பேரூராட்சி அலுவலக வரி வசூலிப்பாளர் முருகனை சந்தித்துள்ளார். அப்போது முருகன் வரைபட சான்று வழங்காமல் தொடர்ந்து சுபினை அலைக்கழித்தாராம். இறுதியில் சென்னை ஐடி ஊழியர் கற்றுக்கொடுத்த பாடத்தை முருகனால் மறக்கவே முடியாததாக மாறியது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அந்த வகையில் கன்னியாகுமரியில் ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள ஏற்றக்கோடு மணலித்தறைவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடைய மகன் சுபினுக்கு 25 வயது ஆகிறது. சுபின் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

புதிதாக வீடு கட்ட அனுமதி
சென்னை ஐடி ஊழியரான சுபின் புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சி அலுவலக வரி வசூலிப்பாளர் முருகனை (59) சந்தித்திருக்கிறார். அப்போது அவர் வரைபட சான்று வழங்காமல் தொடர்ந்து சுபினை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வரைபட சான்று தருவதாக கூறியிருந்தாராம். இதனை கேட்ட சுபின், பணத்தை தயார் செய்து விரைவில் வருவதாக கூறி விட்டு சென்றாராம்.
லஞ்சம் கேட்ட அதிகாரி
ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுபின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து, அந்த பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் சென்று கொடுங்கள் என போலீசார் தெரிவித்தார்கள். அதன்படி பணத்துடன் ஐடி ஊழியர் சுபின் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்தனர்.
சிக்கிய முருகன்
திட்டமிட்டப்படி பணத்தை வரி வசூலிப்பாளர் முருகனிடம் கொடுத்தார். உடனே முருகனும் புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சால்வன்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, ரெமா மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்து கையும், களவுமாக வரி வசூலிப்பாளர் முருகனை மடக்கி கைது செய்தனர்.
வழக்கு பதிவு
தொடர்ந்து அவரிடம் கணக்கில் வராத பணம் வைத்திருக்கிறாரா? என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நிறைவு பெற்றதும் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கட்டிட வரைபட அனுமதிக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலிப்பாளர் முருகன் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications