கன்னியாகுமரியில் நாகர்கோவில் சுசீலா செய்த நம்ப முடியாத வேலை.. தங்கச்சியுடன் சிக்கி ஒரே அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் குருகுலம்சாலையை சேர்ந்தவர் பகவத் என்பவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் தயாருக்கு உடல் நிலை சரியில்லை.. இதனால் அவர் வீட்டில் அவரை பராமரிக்க சுசீலா என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த சுசீலா செய்த காரியத்தை பார்த்து டாக்டர் ஆடிப்போனார். அவரது தங்கையும் உடந்தையாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வேலை செய்யும் பலர் நேர்மையானவர்களே இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு தங்க நகைகள் மற்றும் பணம் திருடுவது நடக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

வயதான மாமியார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குருகுலம்சாலை என்ற பகுதி இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்த 45 வயதாகும் பகவத், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் டாக்டரின் வீட்டில் அவர் இருந்து வருகிறார். அவரை உடனிருந்து பராமரிக்க மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடையை சேர்ந்த சுசீலா (54) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். சுசீலா தினமும் காலையில் டாக்டரின் வீட்டுக்கு வந்து அவரது மாமியாருக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பி வந்துள்ளார்.
தங்க சங்கிலி மாயம்
அதன்படி நேற்றுமுன்தினம் காலையில் சுசீலா வேலைக்கு வந்து விட்டு மாலையில் தனது வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் அவர் சென்ற பின்பு இரவு 7 மணிக்கு டாக்டர் பகவத்தின் மனைவி, தனது தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார் அப்போது தாயார் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு ஆடிப்போனார்.
திருடியதை ஒப்புக்கொண்ட சுசீலா
தொடர்ந்து நகையை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நகையை வேலைக்காரி சுசீலா திருடி சென்றிருக்கலாம் என சந்தேகம் அவருக்கு எழுந்தது. மேலும் தனது கணவர் டாக்டர் பகவத்திடம் கூறினார். பிறகு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பகவத் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், சுசீலாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்துடன் நகையை தனது தங்கை மீனச்சல் பகுதியை சேர்ந்த சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்,
தங்கையும் கைது
உடனே போலீசார் மீனச்சலில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்து நகையை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய சுசீலா மற்றும் தங்கை சாந்தி ஆகியோரை கைது செய்தனர். வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே நகையை பெண் திருடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இரட்டை ரயில் பாதை பணி.. குமரி செல்லும் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications