கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க ஓட்டா? அதை வேறு யாரோ போட்டுட்டாங்க பாஸ்.. நெல்லை, குமரியில் அடுத்தடுத்து பதிவான கள்ள ஓட்டு!

கன்னியாகுமரியில் அஜின் என்ற இளைஞரின் ஓட்டை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டு போட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அஜின் என்ற இளைஞரின் ஓட்டை வேறு ஒரு நபர் கள்ள ஓட்டு போட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 95 தொகுதிகளில் நாடு முழுக்க நடைபெறுகிறது. அதேபோல் தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடந்து வருகிறது. இன்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

Lok Sabha Election 2019: Fake vote cast in Kanniyakumari in the name a youngster

இந்த நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக இந்த தேர்தலில் கள்ள ஓட்டு பதிவாகி உள்ளது. குமரி தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

அந்த பகுதியில் உள்ள கல்லுவிளையை சேர்ந்த அஜின் என்ற இளைஞரின் ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டனர். கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறி கொடுத்த அஜின் வாக்குச்சாவடிக்கு வந்து ஏமாற்றமடைந்தார். இவர் சில நிமிடம் வாக்குசாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தார்.

வேலூர் மாவட்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை.. அதிகாரிகளுடன் வாக்கு வாதம்!வேலூர் மாவட்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 28 பேருக்கு ஓட்டு இல்லை.. அதிகாரிகளுடன் வாக்கு வாதம்!

அதேபோல் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களது வாக்கை பதிவு செய்த நபர்கள் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவரது வாக்கை பதிவு செய்த நபர்கள் மீது எந்த விதமான சந்தேகமும் எழாத காரணத்தால், அவரின் வாக்கு பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது நெல்லை மற்றும் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Lok Sabha Election 2019: Fake vote cast in Kanniyakumari in the name a college youngster.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X