பொம்மையோடு நின்ற குழந்தை.. வக்கீல் செய்த வக்கிர வேலை! கதிகலங்கிய கன்னியாகுமரி.. இப்போ மாவுக்கட்டு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன இரண்டு சிறுமிகள் நான்கு நாட்களுக்கு பிறகு நெல்லையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் கழிவறையில் வழுக்கி விழுந்ததால் அவரது கையில் மாவு கட்டு போட்டதாக விளக்கம் அளித்துள்ளனர் போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ஒருவர் எட்டாம் வகுப்பும் இன்னொருவர் ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்த பணம், உடைகள், பொம்மை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த தாய் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் சிறுமிகளை தேடும் பணியில் இரு தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 13ஆம் தேதி காலையில் காங்கன் கடைப் பகுதியில் ஒருவர் சிறுமிகளுடன் பேசிக்கொண்டிருந்ததும் அவர்களுக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டு இருவரையும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தக்கலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான அஜித் குமார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை வைத்து நெல்லை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறுமிகளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்த போது வீட்டில் இருந்தே பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் சென்றதாகவும், தொடர்ந்து எங்கு செல்வது என தெரியாமல் நின்றபோது அஜித்குமார் தனது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு இரு சிறுமிகளையும் பேச்சு கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார்,.
தொடர்ந்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு பேருந்தை ஏற்றிவிட்டு சென்றுள்ளார். தொடர்ந்து அவர்கள் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இறங்கிய போது தான் போலீசார் மீட்டனர். தொடர்ந்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு மார்த்தாண்டம் போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் அஜித்குமார் மீது ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் கழிவறைக்கு சென்ற போது அஜித்குமார் வழுக்கி விழுந்ததாகவும் அப்போது அவருக்கு கை எலும்பு முறிந்ததாகவும் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அஜித்குமாருக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரால் திருமணம் நின்று போனதும் தெரிய வந்துள்ளது. அஜித் குமாரின் தந்தை சிவசேனா கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications