பிரபல நடிகர் மகள் + விஐபி மனைவி.. பூரா அமுங்கிடுச்சே.. பப்ளிக்ல "ஹார்ட்டின்" விட்ட காசி ஞாபகமிருக்கா
கன்னியாகுமரி: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போலவே, 2020ல் தமிழகத்தை உலுக்கி எடுத்ததுதான், நாகர்கோவில் காசியின் பாலியல் சம்பவமாகும்.. அரசியல் தொடர்புடையதாகவும், மிகப்பெரிய விஐபிகளுடன் நெருக்கம் இருந்ததாகவும் சொல்லப்பட்ட இந்த காசி யார்?
காசி என்கிற சுஜி.. பட்டப்படிப்பு முடித்தவர்.. 26 வயதாகிறது.. இவர் அப்பா நாகர்கோவிலில் சுகுனா சிக்கன் டீலர் ஆவார்.. இவர்கள் வசதியான குடும்பம்.. மகனை அளவுக்கு அதிகமான செல்லம் தந்து வளர்த்திருக்கிறார்கள்.
பிஞ்சு வயது: அதனால், பிஞ்சு வயதிலேயே சேட்டையை துவங்கிவிட்டார் காசி.. கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்துள்ளார்..

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் காசி. 2020-ல் கைதானார்.. அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், ஹார்ட்டிஸ்க்கில், பெண்களின் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் நிரம்பி கிடந்தன.. அதாவது, 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டது.
அம்மாக்கள்: 5 பெண்கள் காசி மீது புகார் கொடுக்கவும், மாதர் சங்கமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. அனைத்து குற்றமும் நிரூபிக்கப்பட்டு, இப்போது ஆயுள் தண்டனையும் தரப்பட்டுள்ளது. காசி குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளிவரும்போதெல்லாம், தமிழகமே பரபரப்பாகிவிடும்.. காரணம், இவரால் நாசம் செய்யப்பட்டதில் சிறுமிகள் முதல் அந்த சிறுமிகளின் அம்மாக்கள்வரை அடங்குவார்கள்.
பெண்களை சீரழித்தும், மிரட்டி பணம் பறித்தும், 4 மாடிக்கு வீடு கட்டி இருக்கிறார் காசி.. நிறைய சொத்துக்களையும் வாங்கி போட்டுள்ளார்.. அரசியல் பிரமுகர்களுடன் காசிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. 26 வயதான இளைஞருக்கு, எப்படி இத்தனை விஐபிக்களுடன் தொடர்பு இருக்க முடியும்? என்ற அதிர்ச்சி கேள்வியும் கிளம்பியது.. எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.. ஒரு பிரபல நடிகரின் மகளும், காசியின் பிடியில் விழுந்துள்ளார்..
காமகொடூரன்: இந்த விஷயத்தை முதன்முதலில் பாடகி சின்மயிதான் அம்பலமாக்கியிருந்தார்.. "காசி ஒரு காமக்கொடூரன்... ஸ்கூல் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்... அவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்" என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, ஏற்கனவே நான் காசியை பற்றி சொல்லியிருந்தேன்.. ஆனால் யாரும் அதை பெரிசா எடுத்துக்கலை என்றும் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்..
அந்த விஐபிக்கள் யார், ஏமாற்றிய நடிகரின் மகள் யார், சீரழிந்த சப்இன்ஸ்பெக்டரின் மகள் யார், போட்டோக்களில் உள்ள அந்த பிரபலங்கள் யார், என்றெல்லாம் கடைசிவரை வெளிஉலகுக்கு தெரியவேயில்லை.. கோவை மாவட்டத்தில் காசிக்கு நெருக்கமான விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் உள்ளதாக சொன்னார்கள்.. அவர்களும் யார் என்று தெரியவில்லை..
அரசியல் தொடர்பு: கட்சியில் ஒரு முக்கியமான பதவிக்குகூட காசி ஆசைப்பட்டானாம்.. ஆனால் சூழலும், நிலைமையும் சரியில்லாததால் அந்த வாய்ப்பு தள்ளி போய்விட்டதாம்.. அதற்கு பிறகுதான் அரசியல் பிரமுகர்களின் நட்பால் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ்களில் லீலைகள் ஆரம்பமாகி உள்ளன.
பாண்டிச்சேரி, சென்னை அருகே அவர்களுக்கு சொந்தமாக ரிசார்ட், ஹோட்டல்கள் இருப்பதாகவும், ஏமாற்ற போகும் பெண்களை அந்த ரிசார்ட்டுகளுக்குதான் காசி அழைத்து வந்து, சீரழித்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால் அந்த கட்சி பிரமுகர்கள் யார் என்றெல்லாம் தெரியவில்லை.
ஹார்ட்டின் காசி: காசியை பற்றி நினைவுகூரும்போதெல்லாம் அவரது ஒரு போட்டோவும் சேர்ந்தே பலருக்கு நினைவுக்கு வரும்.. அந்த போட்டோ நாகர்கோவில் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்ய அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஆகும்..

பொதுவாக இப்படி, கைதானவர்களை கோர்ட்டுக்கு வந்தால், தங்கள் முகத்தை கைகளாலோ அல்லது துணியாலோ வெட்கப்பட்டு கொண்டு மறைத்து கொள்வார்கள்.. ஆனால் காசி அப்படி இல்லை.. அங்கிருந்த எல்லா செய்தியாளர்களையும் பார்த்து தன்னுடைய 2 கைகளால் "ஹார்ட்" சிம்பல் காண்பித்தார்... இத்தனைக்கும் அவரது கையில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே போலீசாரும் நின்று கொண்டிருந்தனர்.. இவர்களையும் மீறி, ஹார்ட்டின் சின்னத்தை, கேமராவை பார்த்து காட்டிக்கொண்டே கோர்ட்டுக்கு போன காசியை பார்த்து இந்த தமிழகமே அதிர்ந்தது.
ஆரம்பம் முதலே, இந்த காசி சமாச்சாரமும், பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இருந்தது.. காசி பெண்களுக்கு வலை வீசும்போது, அதில் பெண்களே மயங்கி விழுந்துள்ளனர்.. இதுதான் காசிக்கு வசதியாக போய்விட்டது.. இப்படித்தான் பொள்ளாச்சி விஷயத்தில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.. ஆனால், அதெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை..
விஐபிக்கள்: என்ன கடினமான தண்டனை அந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது? பொள்ளாச்சி விஷயத்தில் உடந்தையாக இருந்த விஐபிக்கள் பிடிபட்டார்களா? என்பதும் இதுவரை உறுதியாக தெரியவில்லை.. அதுபோலவே காசி விஷயத்திலும், அரசியல் தரப்பில் தொடர்பிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அந்த விஐபிக்கள் யார்? நடிகரின் மகள் யார்? அரசியல்வாதிகள் யார்? என்ற தகவல்கள் எல்லாம் இந்த நிமிடம்வரை வெளியே வரவேயில்லை..
ஆனால், இந்த விஷயத்தில், ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், பொள்ளாச்சி விஷயம் போல் இல்லாமல், காசிக்கு ஆயுள் தண்டனை உடனடியாக தரப்பட்டுள்ளது.. சாகும்வரை சிறையிலேயே காசியை தள்ளியிருக்கிறது.. தயவுதாட்சண்யம் பார்க்காமல், நீதிமன்றம், இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது பல தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.. அத்துடன், பெண்கள் மேல் "கை" வைக்க நினைக்கும் ஒவ்வொரு "காம பிண்டங்களுக்கும்", இந்த தண்டனை ஒரு அபாய மணியாகவே இனி ஒலிக்கும் என்றும் நம்பப்படுகிறது...!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications