கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள்! கைதான நாகர்கோவில் காசியின் பகீர் லீலைகள்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நாகர்கோவில் காசி இதுவரை 120 பெண்களை ஏமாற்றியதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பெண் டாக்டர் உள்பட பல பெண்களுடன் பேஸ்புக் மூலம் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அந்த பெண்களிடம் காதல் அம்பை எய்துள்ளார்.

இதில் சிக்கும் பெண்களை தனியாக வரசொல்லி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்திருந்தார். இதையடுத்து அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பிவிடுவதாக காசி மிரட்டியுள்ளார்.

 மீண்டும் பாலியல் துன்புறுத்தல்

மீண்டும் பாலியல் துன்புறுத்தல்

இவ்வாறு மிரட்டி மிரட்டியே அந்த பெண்களை மீண்டும் மீண்டும் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார். ஒரு வேளை மீண்டும் பாலியல் இச்சைக்குள்ளாகாத பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலையும் காசி செய்ததாக பெண் ஒருவர் புகார் செய்திருந்தார்.

 குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

அந்த புகாரின் பேரில் காசி குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் சென்றது. வழக்கு விசாரணைக்கு செல்லும் போது கை விலங்குகளுடன் இருந்த காசி தன் கைகளை ஹார்டின் ஷேப்பில் வைத்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி

2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த நிலையில் காசியின் லேப்டாப்பில் அவருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் இருப்பதை அறிந்த அவரது தந்தை தங்கபாண்டியன் அவற்றை அழிக்க முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 முறை ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

3 ஆவது முறை ஜாமீன் கோரி மனு

3 ஆவது முறை ஜாமீன் கோரி மனு

மூன்றாவது முறையும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் காசியின் தந்தை என்பதை தவிர அந்த வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் 395 நாட்களாக சிறையிலிருந்ததால் என் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ஜாமீன் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

4ஆவது முறையும் தள்ளுபடி

4ஆவது முறையும் தள்ளுபடி

இந்த நிலையில் 4ஆவது முறையாக கன்னியாகுமரி நீதிமன்றத்தில் தங்கபாண்டியன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது காசி அவரை கைது செய்வதற்கு முன்பு வரை 120 பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றியுள்ளார். மேலும் அவரது தந்தை அழிக்க முயற்சித்த லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்களும் 1900 ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து தங்கபாண்டியனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

English summary
CBCID found that 400 obscene videos and 1900 photographs in Nagercoil Kasi's laptop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X