Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈவு இரக்கமற்ற பிள்ளைகள்.. கன்னியாகுமரி கலெக்டர் ஆபிஸில் தரையில் உருண்டு அழுத மூதாட்டி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமுரி : பெற்ற பிள்ளைகள் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு ஏமாற்றியதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி அழுது புரண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெற்றோரை ஏமாற்றி நிலத்தை வாங்கிய மகன்கள் மீது பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கன்னியாகுமரி கலெக்டர் ஆபிஸில் அவர் கதறி அழுதது பார்ப்போரை கலங்க வைத்தது.

An old woman cried at the Kanyamakumari Collectors office because her children cheated her

பெற்றோர்களை வயதான காலத்தில் புறக்கணிக்கும் மகன்கள் அதிகரித்து வருகிறார்கள். கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோரை கடைசி காலத்தில் கலங்க வைக்கிறார்கள். சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு ஏமாற்றுவதும் நடக்கிறது.

உழைக்கவும் முடியாமல், உழைத்த பணத்தை பிள்ளைகளுக்கு செலவு செய்துவிட்டு அவர்கள் கொடுக்கும் பணத்திற்காகவும், உணவுக்காவும் கையேந்தும் நிலையில் பல பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் எடுத்துக் கொள்ளும் பிள்ளைகள் அவர்களை புறக்கணிப்பது உண்மையில் வேதனையான விஷயம்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே நடுவூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதானவர் மூதாட்டி புஷ்பம். இவரது கணவர் முத்து. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களுக்கு கல்யாணம் ஆன நிலையில், பெண்ணுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை..

An old woman cried at the Kanyamakumari Collectors office because her children cheated her

இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்க வேண்டும் எனக் கூறி இரண்டு மகன்களும் தன் அப்பா அம்மாவிற்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை தங்கள் பெயருக்கு எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதன் பின்னர் இரண்டு மகன்களும் தாய், தந்தை மற்றும் சகோதரியை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பம் மற்றும் முத்து தம்பதியினர் தன் மகன்கள் தங்களை ஏமாற்றி விட்டனர். இதனிடையே மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைப்பதற்காக இருந்த 20 சென்ட் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்துள்ளார்.

An old woman cried at the Kanyamakumari Collectors office because her children cheated her

ஆனால், பல முறை புகார் கொடுத்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, மூதாட்டி புஷ்பம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் புரண்டு, உருண்டு அழுது புலம்பினார். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தார்கள். இதையடுத்து அவர் புகார் கொடுத்துவிட்டு சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+