நாகர்கோவிலில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி.. வழிநெடுக பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ சென்றார். நாகர்கோவில் வேப்பமேடு பகுதியில் இருந்து வடசேரி எம்ஜிஆர் சிலை வரை பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார்.
அப்போது சாலைகளின் இருபுறமும் இருந்த தொண்டர்கள் பூக்கள் தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் பரப்புரை வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டயிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு வருகை தந்தார்.
பின்னர், அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ சென்று கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றவாறு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் ரோடு ஷோ வந்தார். அப்போது அவருக்கு பூக்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மோடியின் பிரசார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
பிரதமர் மோடி ரோடு ஷோவை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை முதல் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நின்று பிரதமரை காணும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலையில் மீண்டும் கார் மூலம் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பவுள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி வருகையை முன்னிட்டு, திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டர் ஒத்திகை நடத்தப்பட்டது. ரோடு ஷோ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்துள்ளனர். நாகர்கோவில் நகரம் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications