நாடு மோடி கையில் இருந்தால்தான் பாதுகாப்பு.. சொல்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்
Recommended Video

கோட்டார்: பாகிஸ்தான் மீது போர் தொடுத்து தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து கட்டி பாரதம் வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. தொடர்ந்து நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும், பாதுகாப்பிற்கு கைகொடுக்கும் மோடி கையில் நாடு இருக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு கமல் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும் போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பாதுகாக்கும் வீரர்களுடன் அணைத்து விழாக்களையும் கொண்டாடி மகிழ்ந்தவர் பிரதமர் மோடி. கிராம மக்கள், நகர மக்கள் என அணைத்து தரப்பு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
அதற்காகவே நாடு முழுவதும் அனைவரும் தங்கள் வீடுகளின் முன் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் விருப்பம் மற்றும் பிரார்த்தனை நிச்சயம் கைகூடும். மீண்டும் நாட்டின் பிரதமராக மோடி வருவார். உலகம் நம்மை வணங்கும் காலம் வெகு விரைவில் வரும்.
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து கட்டி பாரதம் வரலாற்று சாதனை நிகழ்த்தி உள்ளது. ஜாதி மதம் கடந்து நூற்றி முப்பது கோடி மக்களுக்கும் இன்று தான் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான், தொடர்ந்து நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பிற்கு கைகொடுக்கும் மோடி கையில் நாடு இருக்க வேண்டும்.
பாரிவேந்தருடன் நல்ல நட்பு உள்ளது. பாஜகவிற்கு யாரும் வேண்டதகாதவர்கள் அல்ல. நாட்டிற்கு எது நல்லது என்ற திசையை நோக்கி பயணம் மேற்கொள்கிறோம். சிறந்த கல்வியாளர் அரசியல் கட்சி தலைவர் பாரிவேந்தர் அவர்களை என்றும் போற்றுகிறேன்.
அதிமுக பாஜக பாமக கூட்டணி விமர்சனங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே தெளிவான கருத்தை கூறி விட்டார். வர இருக்கும் இந்த தேர்தல் நாட்டின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் தேர்தல். நாட்டின் வளர்ச்சி அதன் மூலம் கிடைக்கும் வெற்றி நாட்டின் நூற்றி முப்பது கோடி மக்களுக்கும் கிடைக்கும் வெற்றி என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications