பிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை
தன்னை தானே சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி: பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ்காரர், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்!
கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ். இவருக்கு 28 வயதாகிறது. இவர் 2018ல் காவலர் பணிக்கு சேர்ந்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கோதையாறு மின்உற்பத்தி மைய பாதுகாப்புப் பணியில் அஜின் ராஜ் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் உடன்பணி புரிந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 21 நாள்கள் லீவில் இருந்த அஜின் சில தினங்களுக்கு முன்புதான் வேலைக்கு வந்தாராம். மேலும் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு பிரிந்து உள்ளதாகவும், அந்த கவலை காரணமாகவே இப்படி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல் கூறுகிறது. எனினும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications