கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜபக்சேவின் வேட்பாளர் எச் வசந்தகுமார்.. பொன் ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டால் குமரியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்சேயின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவில் பகுதியிலிருந்து இன்று திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தை
தொடங்கியுள்ளா பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்.

Pon Radharkrishan criticises H. Vasanthakumar

இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் வேட்பாளராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், இலங்கை அரசின் கைக்கூலி.

நான் குளிக்கப்போய்ட்டேன்.. துரைமுருகன் செம கலாய்.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ட்ரெண்ட் நான் குளிக்கப்போய்ட்டேன்.. துரைமுருகன் செம கலாய்.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ட்ரெண்ட்

இலங்கை அரசிற்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள துறைமுகத்தை தடுப்பேன். எதிர்கால தேர்தல்களில் கை சின்னம் வழங்கக்கூடாது. அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.

வசந்த் அன்ட் கோ நிறுவனம் மூலமாக இலவச பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் வசந்த் அண்ட் கோ தேர்தல் அலுவலகமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர்,அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

English summary
Pon Radhakrishnan criticises H. Vasanthakumar by saying he is the candidate on behalf of Rajapakshe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X