தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றனும்.. கன்னியாகுமரியில் திமுகவை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
கன்னியாகுமரி: தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
காலியாக இருந்த இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவிக்கு மத்திய அரசு நேற்று இரண்டு பேரை நியமனம் செய்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தல் தேதியை இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அனேகமாக லோக்சபா தேர்தல் மே முதல் வாரத்திற்குள் நடைபெறும் என தெரிகிறது. இதனால் கூட்டணி அமைப்பது, பிரச்சாரம் மேற்கொள்வது என அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக உள்ளன.

இந்நிலையில் லோக்சபா தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவர் அடிக்கடி தமிழகம் வந்து பிரச்சாரம் செய்கிறார்.. அண்மையில் பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அந்த வகையில் இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதற்காக இன்று காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சற்று முன்னதாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் வந்தார. பின்னர் பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக உடன் கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மோடி பிரச்சார மேடைக்கு வந்த உடனேயே, பாஜக தொண்டர்கள் மோடி, மோடி என உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது.. இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது .. 1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் யாத்திரை சென்றேன், இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன்.. தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். இந்தியா கூட்டணி வரலாறு மோசடியும் ஊழல்களும் கொண்டது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் ஒற்றை இலக்கு. 2 ஜி ஊழலில் பெரும் பங்கு வகித்தது திமுகதான்" என்று மோடி கூறினார்.
இன்று மதியம் பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம் 12.15 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவுக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக விவேகானந்தா கல்லூரியை சுற்றி வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி காரில் வந்து- செல்லும் சாலை ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்..
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்..
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications