மசாஜ் சென்டரில் விபச்சாரம்.. சிக்கிய 2 புரோக்கர்கள்.. லாட்ஜ்களில் அதிரடி சோதனை.. குமரியில் பரபரப்பு
மசாஜ் சென்டரில் 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மசாஜ் சென்டரில், 2 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இது தொடர்பாக 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது.. அதனால் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன..
அதில் ஒன்றுதான் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை பல மாதங்களாகவே உள்ளது.

சுற்றுலா தொழில்
இதனால் சுற்றுலா தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டது.. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து எடுத்த நடவடிக்கை காரணமாக, தொற்று மெல்ல மெல்ல குறைந்துவருகிறது.. கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.. சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அப்படித்தான் பல நாள் சொந்த ஊரில் முடங்கி கிடந்த மக்கள் ஆங்காங்கே சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர்.. அந்த வகையில் கன்னியாகுமரிக்கும் செல்ல ஆரம்பித்துள்ளனர்..

அனுமதி
இங்கு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாட்களை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் கன்னியாகுமரிக்கு வந்து செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரியை பொறுத்தவரை சர்வதேச சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.. எனவே, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.. இவர்கள் அங்கிருக்கும் லாட்ஜூகள், ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கி செல்கின்றனர்...

ரோந்து
நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாவதால், போலீசாரின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... மக்கள் கூடுமிடங்களில் எல்லாம் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்... அதேபோல லாட்ஜ்களிலும், ஹோட்டல்களில் சோதனையில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில், ஒரு மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது...

2 பெண்கள்
இதையடுத்து அந்த மசாஜ் சென்டருக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.. அங்கு 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் இருந்தனர்... அதில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர்... இன்னொருத்தர் தமிழ்நாடு... அவர்கள் 2 பேருமே மசாஜ் சென்டர் பெயரில் அங்கு விபசாரம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. மசாஜ் சென்டரில் 2 ஊழியர்கள் இருந்துள்ளனர்.. ஒருவர் பெயர் தேவஆனந்த், 27 வதயான இவர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர்..

கைது
இன்னொருத்தர் கேரளாவை சேர்ந்த உதயலால் ஆவார்.. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களும் மீட்கப்பட்டு, அவர்களை பெண்கள் காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்... இப்போதுதான் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications