"யாரோ இருக்காங்க".. நடுரோட்டில் பதறிய விஜயதாரணி.. திரண்டு வந்த போலீஸ்.. குமரியில் என்னாச்சு?

கன்னியாகுமரியில் விஜயதாரணி தொண்டர்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டார்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: விஜயதாரணி நடுரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை தொடங்குகிறார்.

கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் இந்த பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

யாத்ரா

யாத்ரா

ராகுல் காந்தியின் பாதயாத்திரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்... அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். ஸ்டாலினுக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட எல்லையான காவல்கிணறில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... முன்னதாக, இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

 குமரியில் ராகுல்

குமரியில் ராகுல்

அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியும் தரப்பட்டுள்ளது. கோஷ்டி பூசல்கள் இல்லாமல், ஒற்றுமையாக இணைந்து ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்கனவே காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியும் இருந்தது.. அப்படி இருந்தும், திடீரென கன்னியாகுமரியில் பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்துவிட்டது.. பொதுக்கூட்டம் நடக்க போகும் இடத்துக்கு அருகிலேயே ராகுல்காந்தியை வரவேற்க தொண்டர்கள் ஏராளமானோர் மதியம் முதல் திரண்டிருந்தனர்..

 கடற்கரை + காற்று

கடற்கரை + காற்று

அப்போது, காங்கிரஸ் கட்சி பேனர்களையும், கொடிகளையும் ஏராளமான பறக்க விட்டிருந்தனர்.. ஆனால் அவைகளை தனியார் இடங்களில் வைத்துள்ளனர்.. அதுவும் இரும்பு கம்பிகளை நட்டுவைத்து, அதில் கட்சி கொடிகளையும் பேனர்களையும் தொண்டர்கள் மாட்டியிருந்தனர். அது கடற்கரை பகுதி என்பதாலும், காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதாலும், அந்த இரும்பு கம்பிகள் எந்நேரமும் கீழே விழுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால், அவைகளை போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்..

 ம்ஹூம்.. முடியாது..

ம்ஹூம்.. முடியாது..

இதை பார்த்ததும், அங்கிருந்த தொண்டர்கள் ஆவேசமானார்கள்.. விஜயதாரணி தலைமையிலான தொண்டர்கள், பேனர்கள், கொடிகளை அங்கிருந்து அகற்ற கூடாது என்று சொல்லி, போலீசாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, திடீர் மறியலிலும் ஈடுபட்டுவிட்டனர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத போலீசார், அவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தினர்.. ஆனால், கொடிகள், பேனர்கள் உடனே அதே இடத்தில் வைத்தாக வேண்டும் என்று கறாராக சொல்லவும், போலீசார் கையை பிசைந்தனர்.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

அதற்குள் சில தேசிய தலைவர்களும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிட்டனர்.. இப்படியே பேச்சுவார்த்தை தொடர்ந்தால், ராகுல் காந்தி வரும் சமயத்தில், தீவிரமாகி விவகாரமாகிவிடும் என்பதால்,வேறு வழியின்றி, அந்த பேனர்களை மறுபடியும் நட்டுவைக்க அனுமதி தரப்படும் என்று சொல்லி உறுதி கூறினர்.. இதைத்தொடர்ந்து மீண்டும், கொடிகள், பேனர்கள் கட்டப்பட்டு வருகின்றன.. இதுகுறித்து விஜயதாரணி செய்தியாளர்களிடம் கேட்டனர்.

 உளவு பாருங்க

உளவு பாருங்க

அதற்கு அவர், "நிறைய பேனர்கள் கொடிகளை போலீசார் கழட்டிவிட்டார்கள்.. தொண்டர்கள் கடுமையாக எதிர்க்கவும், மீண்டும் அனுமதி தந்துள்ளனர் என்றார்.. உடனே செய்தியாளர்கள், பேனர்கள், கொடிகளை யார் அப்புறப்படுத்த சொன்னார்கள்? என்று கேட்டனர்.. அதற்கு விஜயதாரணி, பின்னணியில் இருப்பது யார் என்று தெரியல.. நீங்களே கண்டுபிடிச்சி சொல்லுங்க.. "இதன்பின்னணியில் இருக்கக்கூடிய விஷயத்தை உளவுப்பார்த்து கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று சிரித்து கொண்டே கூறினார்.. ராகுல்காந்தி சாயங்காலம் வருவதற்குள், ஒரு குட்டி சலசலப்பே அங்கு நடத்தி முடித்து காட்டிவிட்டனர் கதர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+