மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு.. மாணவிகளுக்கு ஆபாச பாடம்! ஆசிரியருக்கு எதிராக திரண்டு வந்த பெற்றோர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் நடந்து கொண்ட செயல் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக மைனர் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பாலியல் குற்றங்கள்
பெரும்பாலான நேரங்களில் பெண் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த நபர்கள் மூலமே பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் வெளியே சொல்லவும் தயங்குகின்றனர். இருப்பினும், யாரும் பாலியல் தொல்லை கொடுத்தாலும் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று அரசு பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. குழந்தைகளுக்குப் புகார் அளிக்க ஏதுவாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி
1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் சில நேரங்களில் துர்திஷ்டவசமாக ஆசிரியர்களாலேயே பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அப்படியொரு நிகழ்வு தான் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

ஆபாச பாடம்
இங்கு ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான பல்வேறு மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தச் சூழலில் அங்குப் படிக்கும் இரு மாணவிகள் குழந்தைகள் உதவி மையத்திற்குத் தொடர்பு கொண்டு ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். அதாவது அந்தப் பள்ளியில் அக்கவுண்டன்சி ஆசிரியராக உள்ள நபர், தங்களிடம் ஆபாசமாகப் பேசியதாகப் புகார் அளித்துள்ளார்.

மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு
+1, +2 வகுப்பில் பாடம் எடுக்கும் நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தங்களிடம் தவறாக பேசியதாகவும் ஆபாச பாடம் நடத்தியதாகவும் மாணவிகள் புகார் அளித்தனர். மேலும் மாணவிகளின் தங்கள் பெற்றோரின் உதவியுடன் குளச்சல் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை
மேலும், குழந்தைகள் உதவி மைய அதிகாரிகளும் நேற்று அந்தப் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். மாணவிகள் புகார் அளித்த சம்மந்தப்பட்ட அக்கவுண்டன்சி ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் . ஆசிரியரே இப்படியொரு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications