வீறுநடை போட்ட ராகுல் காந்தி.. தேசிய கொடி கொடுத்து ஸ்டாலின் தொடங்கி வைத்த ஒற்றுமை யாத்திரை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை கொடுத்து தொடங்கி வைத்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு பக்கம் பாஜக ஆயத்தமாகி இருக்கும் காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் உட்கட்சி பூசல்களை களைந்து தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

ஆனால், சமீபத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய தொடர் போராட்டம் அக்கட்சியில் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 ஒற்றுமை யாத்திரை

ஒற்றுமை யாத்திரை

அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்கவும், ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இன்று ஒற்றுமை யாத்திரையை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

 தொடங்கி வைத்த ஸ்டாலின்

தொடங்கி வைத்த ஸ்டாலின்

இதற்காக கன்னியாகுமரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காந்தி மண்டபத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து மு.க.ஸ்டாலின் ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார்.

 காங்கிரஸ் முதலமைச்சர்கள்

காங்கிரஸ் முதலமைச்சர்கள்

இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர்.

 12 மாநிலங்கள்

12 மாநிலங்கள்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது.

 3,570 கிலோ மீட்டர்

3,570 கிலோ மீட்டர்

380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+