சர்வேயர் டூ தாசில்தார்.. கன்னியாகுமரி விஏஓ சொத்து மதிப்பு சான்று தரலியா? "பேபி"க்கு அசிங்கமா போச்சு
கன்னியாகுமரி: வங்கிக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு மானியத்தொகையை விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கன்னியாகுமரி விஏஓ கைதாகியிருக்கிறார்.. அதிலும் பெண் விஏஓ நாளுக்கு நாள் அதிக அளவில் கைதாகி கொண்டிருக்கிறார்கள். இந்த கைது நடவடிக்கைகள் வருவாய்த்துறை, பதிவுத்துறை தரப்பில் மிகுந்த அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்.. இவருக்கு 27 வயதாகிறது.. அந்த பகுதியில் சொந்தமாக ஆட்டோமொபைல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், நாகையில் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணப்பித்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அண்மையில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அந்த கடனுக்கு அரசின் மானியமாக வர வேண்டிய ரூ.1.25 லட்சத்தை விடுவிக்க வேண்டுமானால், தனக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் தருமாறு சதீஷ்குமாரிடம் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் (வணிகத் துறை) அன்பழகன் கட்டாயப்படுத்தினாராம். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார், லஞ்சம் தர விரும்பாமல், நாகை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
நாகை அரசு அதிகாரி கைது
போலீஸார் ஏற்பாட்டின்படி, ரசாயனம் தடவிய ரூ.12 ஆயிரத்தை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் உதவி இயக்குநர் அன்பழகனிடம், நேற்று சதீஷ்குமார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மனோகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், உதவி இயக்குநர் அன்பழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பிறகு அவரிடம் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்பழகன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இந்த கைது நடவடிக்கையானது, நாகையில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணியிருந்தது.
சொத்து மதிப்பு சான்றிதழ்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு லஞ்ச சம்பவம் நடந்துள்ளது.. கல்குளம் தாலுக்காவில் உட்பட்ட தலக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமல ராணி என்பவர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் உதவியாளராக பணிபுரிபவர் பெயர் பேபி.
நெய்யூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற 56 வயது நபர், ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். இவர் தன்னுடைய ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணத்தை காண்பித்து, ஒப்பந்த பணிகளை செய்ய சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.. இதற்கு விஏஓ அமலராணி ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார்.. பிறகு, ரூ.3 ஆயிரம் தந்தால், சொத்து மதிப்பு சான்றிதழுக்கு பரிந்துரை செய்வதாகவும், அதற்கு மேல் லஞ்ச பணத்தை குறைக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
சுற்றிவளைத்த போலீஸ்
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம் குமரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் தந்தார்.. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை விஏஓவிடம் ஆறுமுகம் வழங்க போனார்.. ஆனால், அமலராணி, அந்த பணத்தை வாங்காமல், உதவியாளர் பேபியிடம் கொடுக்க சொல்லி உள்ளார்.
உதவியாளர் பேபியும் அந்த லஞ்சம் பணத்தை வாங்கினார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ அமலராணி, அவரது உதவியாளர் பேபி இருவரையுமே அதிரடியாக கைது செய்துள்ளனர்.. இப்போது அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
தொடரும் கைது நடவடிக்கைகள்
தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.. சாதி சான்றிதழ் கோரியும், பட்டா கோரியும், நிலம் அளவீடு, உதவித்தொகை என எண்ணற்ற உதவிகளை கேட்டு விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேரிடும்போது, அவர்களிடம் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே அதிகாரிகளுக்கு போன் செய்து புகாரை தந்துவிடுவதால், அதிகாரிகளும் ஸ்பாட்டுக்கு கிளம்பி வந்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்கிறார்கள். இதில் விஏஓ, தாசில்தார், முதல் பெண் அதிகாரிகள் வரை சிறை செல்வது வேதனையை தந்து கொண்டிருக்கிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications