பாராளுமன்றத்துக்குள் போவோம் அல்லது எங்களுக்கான பாராளுமன்றத்தை உருவாக்குவோம்: சீமான் பகீர் பேச்சு
கன்னியாகுமரி: பாராளுமன்றத் தேர்தலில் வென்று நாங்கள் உள்ளே நுழைவோம்.. அல்லது எங்களுக்கான பாராளுமன்றத்தை நாங்களே உருவாக்குவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இதெல்லாம் வாக்கு பெறுகிற ஒரு நுட்பம். எப்பவுமே பாஜக இப்படித்தான் செய்யும். அதிகமாக தமிழ் பற்றி பேசும். ஏனெனில் நான் தமிழ் பற்றி பேசுகிறேன். வளர்கிறேன் அதனால்தான் பாஜகவும் அப்படி பேசும். அப்புறம் ஈழத்தை பற்றி பேசும். இலங்கை இந்திய நட்புறவுன்னு சொல்றீங்க.. இந்தியா- ஈழ நட்புறவுன்னு சொல்றீங்க..
சரி அமித்ஷா சொல்றபடியே தமிழர் ஒருத்தர் பிரதமரா வரட்டும்.. எப்போ? 2024 தேர்தல்.. ஒரு தமிழர் பிரதமர் வேட்பாளர்னு அறிவியுங்க.. நாங்க எல்லாம் ஆதரித்து வாக்கு செலுத்திவிட்டுப் போகிறோம்.. அந்த துணிவு இருக்கிறதா? அமித்ஷாவுக்கு அந்த துணிவு இருக்கிறதா?
2024-ல் ஒரு தமிழ் பிரதமர்.. யாரு? தம்பி அண்ணாமலையா? அல்லது அம்மா தமிழிசையா? இல்லை எங்க அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணனா? யாரு? சும்மா அப்படியே வாயிலேயே பாயாசம் காய்ச்சி..வடை சுட்டு எத்தனை காலத்துக்கு தமிழர்களை ஏமாளிகளா நினைச்சு பைத்தியகார கும்பலா நினைச்சுகிட்டு இருப்பீங்க?
தமிழர் பிரதமராகட்டும்.. சரி.. வேட்பாளரை அறிவியுங்க... சொல்லிட்டு இந்த தேர்தலை சந்திக்க முடியுமா? அப்ப எப்பவோ வரலாம்.. அதை நாங்க பார்த்துக்கொள்கிறோம்.. நீங்க சொல்லக் கூடாது. பாராளுமன்றத்துக்குள் போவோம்.. அல்லது நாங்கள் எங்களுக்கான பாராளுமன்றத்தை உருவாக்குவோம் அதில் என்ன இருக்கிறது?. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications