அரசியலே இந்த வார்த்தைகளை சுற்றித் தான்! அதை பேசக்கூடாது என்றால் வேறு எதை பேசுவது? -தமிமுன் அன்சாரி
கன்னியாகுமரி: எம்.பி.க்களின் குரல் வளையை நெரிக்கக் கூடிய வகையில் நாடாளுமன்ற செயலகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சாடியுள்ளார்.
அதை பேசக்கூடாது இதை பேசக்கூடாது என்றால் வேறு எதை பேசுவது என அவர் வினவியுள்ளார்.
கன்னியாகுமரியில் தனது கட்சியின் புதிய மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

முட்டாள்தனம்
''ஜூலை 18 அன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஒரு பட்டியலை நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ளது. ஊழல், சர்வாதிகாரம், வெட்கக்கேடு, பாலியல், துரோகம் செய்தார், நாடகம், திறமையற்றவர், முட்டாள் தனம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளனர்.''

குரல் வளையை
''இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் வளையை நெரிக்கக் கூடியது, ஜனநாயக விரோதமானது. அரசியலே இந்த வார்த்தைகளை சுற்றி தான் நிகழ்கிறது. இந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்றால் வேறு எந்த வார்த்தைகளில் எதை பேசுவது? அப்படியெனில், ஆளுங்கட்சியை புகழ்ந்து மட்டும் தான் பேச முடியும்.''

மாற்று வார்த்தைகள்
''இந்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றால் இதற்கு மாற்று வார்த்தைகள் என்ன என்பதை கூற வேண்டும். இலங்கை மக்கள் நடத்திய புரட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அது ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் வெறுப்பு அரசியலை, பிரிவினை அரசியலை தூண்டுபவர்களுக்கும், வளர்ச்சி அரசியலை மறைத்து திசை திருப்புவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.''

இலங்கை மக்களுக்கு
''எனவே இலங்கை மக்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தென் மாவட்டங்களில் நிகழும் கனிம வளக் கொள்ளை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.'' இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications