Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி ராணுவ வீரர் கார்த்திக்.. மனைவி 8 மாத கர்ப்பம்.. ஓடும் பஸ்ஸில் நம்ப முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.. இவர் கடந்த 19ம் தேதி ஊருக்கு வருவதற்காக பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் பேருந்தில் ஏறி உள்ளார். ஆனால் யாருமே நம்ப முடியாத சம்பவம் பேருந்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் என்பவருடைய மகன் கார்த்திக்குக்கு 26 வயது ஆகிறது, இவர் பெங்களூருவில் எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

the decision made by Border Security Force soldier Karthik on a moving bus to kanyakumari

எல்லை பாதுகாப்பு படை வீரர் கடந்த 19-ந் தேதி கார்த்திக் ஊருக்கு வருவதற்காக பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் புறப்பட்டார். அவர் வரும் வழியில் ஓடும் பஸ்சில் வைத்து விஷம் குடித்ததாக கூறப்படகிறது அந்த பஸ் கரூரில் வந்த போது கார்த்திக் திடீரென இருக்கையில் அமர்ந்தபடி மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள், பஸ்சில் இருந்த கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே, கண்டக்டர் மற்றும் டிரைவர் அவரை மீட்டு சக பயணிகள் உதவியுடன் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உறவினர்கள் கரூருக்கு விரைந்து சென்று சிகிச்சையில் இருந்த கார்த்திக்கை பார்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் கடந்த 27-ந் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு பேய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது முடிவுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் பிந்துஜா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊருக்கு புறப்பட்டு வந்த நிலையில் ஓடும் பஸ்சில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+