எதிரணியிலிருந்து இப்படி ஒரு பதிலா?...என்னங்க சொல்றீங்க...பெரியாருக்கு சிலை ...ஆதரித்த பொன்னார்?
நாகர்கோவில்: பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை என்றும் குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் 'பெரியார் உலகம்' என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அண்மையில் நன்றி தெரிவித்தார்.

95 அடி சிலை
இதனால் தமிழக அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்பட போவதாக பலரும் புரிந்துகொண்டு, அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு சிலை அமைப்பதைக் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக அரசும் அல்ல
ஆனால், பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலை வைப்பது தமிழ்நாடு அரசோ, தி.மு.கவோ இல்லை. பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளையே இந்த சிலையை வைக்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறுகனூரில் இந்த சிலையை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை. இந்த விவகாரம் குறித்து வீரமணி விளக்கம் அளித்த பின்னரே பிரச்சனை ஓய்ந்துள்ளது.

தமிழன் முதல் நிலை
நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை இன்னும் நமது தொன்மையை கண்டுபிடிக்க வேண்டும். இதே போல் குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை. சங்கம் வைத்து தமிழை வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும்.

தவறில்லை
பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை. பொதுவாக மறைந்த தலைவர்களுடைய நல்ல கருத்துகளை நாம் ஏற்று பின்பற்ற வேண்டும். வ.உ.சி சிலை மற்றும் மணிமண்டபம் குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்கது. புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்கள், தமிழகம் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியேற்போம்" இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications