இன்ஸ்டா பழக்கத்தால் சிறுமிக்கு நடந்த விபரீதம்.. குமரியில் கலங்கி நின்ற குடும்பம்.. பெற்றோர்களே கவனம்
குமரி: குமரி மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தஞ்சையை சேர்ந்த சிறுவன் பழக்கமானான். இருவரும் பழகி பேசிய நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் சிறுவன் உல்லாசம் இருந்துள்ளான். இதில் கர்ப்பமான அந்த சிறுமி தற்போது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவரது பெற்றோரே சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கிராமத்தில் பெற்றோருடன் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு நாகப்பட்டினத்தை சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகினார். இந்த சிறுமியுடன் அவ்வப்போது பேசி வருவார்.

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்
சிறுமியின் வீட்டில் தந்தை குடித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குமரி சிறுமி, நாகப்பட்டினத்துக்கு சென்று அந்த சிறுவனின் வீட்டில் 15 நாட்கள் தங்கினார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த சிறுமி அங்கு சென்று இருந்தார். அப்போது அந்த சிறுமியின் நண்பனாகிய பள்ளி சிறுவன் ஒருவன் குமரி சிறுமிக்கு அறிமுகமானான். அந்த சிறுவன் தஞ்சாவூரில் வசித்து வருகிறான். குமரி சிறுமியை பார்ப்பதற்காகவே நாகைக்கு சிறுவன் வந்துள்ளான்.
அப்போது இருவரும் நட்புடன் பழகினர். மேலும் இன்ஸ்டாகிராமிலும் மெசேஜ் செய்து வந்தனர். 15 நாட்கள் குமரி சிறுமி நாகப்பட்டினத்தில் தங்கிய நிலையில் அவ்வப்போது அந்த தஞ்சை சிறுவனும் அந்த வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தை கூறி குமரி சிறுமியுடன் உல்லாசம் அனுபவித்து இருக்கிறான். பின்னர் எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
6 மாத கர்ப்பமான சிறுமி
இதையடுத்து 15 நாட்களுக்கு பின்னர் சிறுமி குமரிக்கு வந்துவிட்டார். எனினும் இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுவனுடன் சிறுமி பேசி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாகை சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. இதனை கொண்டாட குமரி சிறுமி நாகைக்கு சென்றுள்ளார். அப்போது தஞ்சை சிறுவனும் அங்கு வந்திருக்கிறார். அப்போது இதேபோல் தனியாக சந்தித்து இருவரும் உல்லாசம் இருந்துள்ளனர். பின்னர் மீண்டும் குமரிக்கு சிறுமி வந்துவிட்டார்.
ஆனால் இந்த முறை சிறுமி கர்ப்பமாகியுள்ளாள். இது தெரியாமலேயே பள்ளிக்கூடமும் சென்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் தாய், தந்தை அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவி நடந்ததை கூறினாள். இதையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார்.
பெற்றோரே சிறுவனை போலீசில் ஒப்படைத்தனர்
அதன்பேரில் போக்சோ பிரிவின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்து தஞ்சை சிறுவனை தேடி வந்தனர். இதற்கிடையே சிறுவனால் கர்ப்பமாக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் தஞ்சை சிறுவனை அவரது பெற்றோரே போலீஸில் வந்து ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் நாகர்கோவிலில் உள்ள சிறார்களுக்கான நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து குமரியில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டார்.
பெற்றோர்கள் கவனம்!
தங்களுடைய இளம் வயது பிள்ளைகள் எப்போதும் செல்போனில் மூழ்கி கிடந்தால் அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, பக்குவமாக எடுத்து சொல்லி கல்வியின் முக்கியத்துவத்தையும் உடலுக்கு ஆரோக்கியமான விளையாட்டுக்களிலும் பெற்றோர்கள் ஈடுபட வைக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் போது அதில் உள்ள ஆபத்துக்களை சொல்லி புரிய வைப்பது பெற்றோர்களின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications