செயின் பறிப்பில் ஈடுபட்டவருக்கு பதவியா.. புஸ்ஸி ஆனந்திற்கு பறந்த கடிதம்.. கொதிக்கும் குமரி தவெக!
கன்னியாகுமரி: தமிழக வெற்றிக் கழகத்தின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் சபினுக்கு அக்கட்சி நிர்வாகிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவருக்கும் தவெகவில் பொறுப்பு அளிக்கப்படுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள நிர்வாகிகள், அவர் மீதான எஃப்ஐஆர் நகல்களையும் புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அரசியல் பணிகளை நிதானமாக மேற்கொண்டு வரும் விஜய், முதலாமாண்டு நிறைவு விழாவிற்கு முன் அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்தார். தவெக தரப்பில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

2 தொகுதிகளுக்கு ஒருவர் மாவட்டச் செயலாளர்
கிட்டத்தட்ட 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அளவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஜனவரி கடைசி வாரத்தில் பனையூரில் உள்ள தலைமை நிலையத்தில் தவெக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து விஜய் உரையாடினார். அதன் முடிவில் 5 கட்டங்களாக மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்பின் முதலாமாண்டு நிறைவு விழா பனையூரில் கொண்டாடப்பட்டது.
கொதிக்கும் குமரி நிர்வாகிகள்
இதனைத் தொடர்ந்து தவெக தரப்பில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீது அக்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை புகாராக தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரச்சனை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளராக சபின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடிதத்தில் என்ன?
இவருக்கு கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவெக நிர்வாகி சிவா எழுதியுள்ள கடிதத்தில், மேற்கு மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சபின் மீது ஒரு செயின் பறிப்பு வழக்கும், காவல்துறையினரை அடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டு காவலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் சபின் தான் ஏ1.
அதேபோல் சுயசாதிப்பற்று கொண்ட நபர் சபின். இவர் கன்னியாகுமரி மாவட்ட தவெக-வை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கி செயல்பட்டு வருகிறார். குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது என்ற தவெக தலைவர் விஜய் அறிவிப்பு என்ன ஆனது? குமரி மாவட்டத்தில் தவெக அழிவை நோக்கி பயணிக்கிறது.
புஸ்ஸி ஆனந்த்-க்கு கடிதம்
தவெக தலைவர் விஜய் சபின் மீது வைத்துள்ள நம்பிக்கை, கட்சியை அழிவு பாதையில் பயணிக்க வைக்கும். மாவட்டத்தில் கட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மேற்கு மாவட்டச் செயலாளர் சபின் மீதான எஃப்ஐஆர் நகல்களையும் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்











Click it and Unblock the Notifications