188 டூ வீலர்கள்! 234 தொகுதிகள்! உதயநிதியின் மெகா ப்ளான்! களமிறங்கிய அன்பில் மகேஷ்! பரபரக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சார பேரணியை வரும் 15ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

188 இரு சக்கர வாகனங்கள்: 188 இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இளைஞர்கள் 234 தொகுதிகளுக்கும் சென்று திமுக இளைஞரணி மாநாடு குறித்த பிரச்சாரத்தை நடத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மெகா ப்ளான் போட்டுள்ளார். அந்த ப்ளானை எக்ஸிகியூட்டிவ் செய்யும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் கவனித்து வருகிறார். இதற்காக நேற்றிரவு கன்னியாகுமரி சென்றடைந்த அவர் இன்று காலை விறுவிறுவென களத்திற்கு சென்று இரு சக்கர வாகன பேரணியை தொடங்கும் இடத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

Udhayanidhi Stalin will inaugurate the two wheeler campaign rally for the DMK Youth wing State Conference in Kanyakumari

234 தொகுதிகள்: 234 தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வரும் நிலையில், திமுக இளைஞரணியினரும், மாணவரணியினரும் 234 தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் பிரச்சார பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அதுவும் ஒரே மாதத்தில் இந்தப் பயணத்தை முடிக்கவுள்ளனர். இதனிடையே இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு;

அன்பில் மகேஷ் விறுவிறு: சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞரணி மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சார பேரணியை நவம்பர் 15ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். கழக இளைஞரணி, மாணவரணி மற்றும் கழகத்தின் இதர அணிகள் இணைந்து பங்கேற்கும் இப்பேரணியில் 188 இருசக்கர வாகனத்தில் பயணிக்கவுள்ள இளைஞர்கள் 234 தொகுதிகளுக்கும் பயணித்து இளைஞரணி மாநாட்டிற்கான பிரச்சாரத்தையும், திராவிடக் கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லவுள்ளார்கள். இதனை முன்னிட்டு நிகழ்ச்சி முன்னேற்பாட்டுப் பணிகளைப் பற்றி கேட்டறிந்து, பேரணி தொடங்கவுள்ள இடத்தை ஆய்வு செய்தோம்.

Udhayanidhi Stalin will inaugurate the two wheeler campaign rally for the DMK Youth wing State Conference in Kanyakumari

கன்னியாகுமரி: ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து தான் தனது பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை தொடங்கினார். அது தேசியளவில் மிகப் பெரும் தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+