"கண்ணே கூசுது".. மோசமா ஆடை அணிந்து நின்ற மனைவி.. பைக்கை நிறுத்திவிட்டு கிட்ட வந்த கணவர்.. ஐயையோ..!!
மோசமாக ஆடை அணிவது தொடர்பாக, மனைவியை வெட்டி கொன்றார் கணவர்
கன்னியாகுமரி: தன் மனைவி, மோசமாக டிரஸ் அணிவது கணவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. அதுக்காக இப்படியா செய்வது? ஆடிப்போய் கிடக்கிறது குமரி மாவட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் எபனேசர்.. 35 வயதாகிறது.. இவர் சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெப பிரின்ஷா.. 31 வயதாகிறது.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு ஜெப சோபன் 14, ஜெப ஆகாஷ் 13, என்று 2 மகன்கள் இருக்கிறார்கள்.

பியூட்டிஷியன்
இத்தனை நாளாக வீட்டில் இருந்த ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசை வந்துவிட்டது.. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார்... 3 மாதங்களுக்கு முன்புதான், இந்த வகுப்பில் போய் சேர்ந்தார்.. இது ஒரு வருட பயிற்சி வகுப்பாகும்... ஜெப பிரின்ஷாவின் அப்பா பெயர் ஜெபசிங்... இவர்தான், தன்னுடைய மகளை நெய்யூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுவிடுவார்.. அங்கிருந்து ஜெப பிரின்ஷா ரயிலில் திருவனந்தபுரம் செல்வார்.. பிறகு சாயங்காலம், கணவர் எபனேசர், ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவார்... இப்படியே 3 மாதங்கள் சென்றன..

மோசம் மோசம்
ஆனால், நாளடைவில் ஜெப பிரின்ஷாவின், உடைகள் அணிவதில் நிறைய மாற்றம் தெரிந்துள்ளது.. வழக்கத்துக்கு மாறாக, அலங்காரமும், ஆடைகளையும் அணிவதால், கணவர் எபனேசர் அதிர்ந்து போனார்.. மனைவியை கண்டித்தார்.. இப்படியெல்லாம் மோசமாக ஆடைகளை அணிந்து, வெளியே செல்ல வேண்டாம் என்று கண்டித்து உள்ளார்.. ஆனால், ஜெப பிரின்ஷா அவர் பேச்சை கேட்கவில்லை.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த எபனேசர், பியூட்டிஷியன் படிப்புக்கு செல்ல வேண்டாம் என்றும் மனைவியை தடுத்துள்ளார்..

பியூட்டி பார்லர்
அதற்கு ஜெப பிரின்ஷா, இது ஒரு வருட படிப்புதான்.. அதை முடித்து விட்டால், சொந்தமாகவே பியூட்டி பார்லர் வைக்கலாம் என்று சொல்லி உள்ளார்.. இதுவே தம்பதிக்குள் வாக்குவாதமாகவும் வெடித்துள்ளது.. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, அம்மா வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர சென்றார் ஜெபனேசன்.. அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது.. வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் தம்பதிக்குள் தகராறு வெடிக்க, ஆத்திரத்தில் இருந்த எபனேசர், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அதற்கு பிறகு அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.. பிறகு, இருட்டு பகுதியில் எகிறி தப்பி ஓடினார்..

பியூட்டிஷியன்
தலையில் பலத்த காயமடைந்த ஜெப பிரின்ஷா அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.. அந்த வழியாக வந்தவர்கள், ஜெப பிரின்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ஜெப பிரின்ஷா இறந்துவிட்டார்.. தகவலறிந்து தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெப பிரின்ஷா உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான எபனேசரை தேடி வந்தனர்.. அவர் திருவனந்தபுரத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர்..

மோசமான டிரஸ்
ஆனால், போலீஸை பார்த்ததுமே அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. எனினும் அவரை கடைசி நேரத்தில் மீட்டு போலீசார் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.. இதையடுத்து தனிப்படை போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். விசாரணைக்கு பிறகே இது தொடர்பாக உறுதியாக கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி டிரஸ் அணிவதில் திடீரென ஏற்பட்ட மாற்றம், கொலை வரை சென்றது, குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. நாளுக்கு நாள் இந்த மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலையை தந்து வருகிறது.. நம் குமரிக்கு என்னதான் ஆச்சு??
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications