கன்னியாகுமரியில் காதலிக்காக எந்த காதலனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன பெற்றோர்
கன்னியாகுமரி: இன்றைக்கு 2 கே கிட்ஸ் இளைஞர்கள் பலர் வாழ்க்கையில் பொறுமை, சகிப்பு தன்மை, தோல்வியை ஏற்கும் பக்குவம், அவமானங்களை கடந்து செல்லும் தன்மை போன்ற குணங்கள் இல்லாமல் வளர்கிறார்கள். சின்ன சின்ன தோல்விகள், பிரச்சனைகளை கூட கையாள தெரியாமல் தடுமாறுகிறார்கள். அதனால் தவறான முடிவெடுக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே காதலி பேசாததால் வாலிபர் எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது
இன்றைய 2 கே கிட்ஸ் இளைஞர்களில் சிலர், வெற்றி ஒன்று தான் வாழ்க்கை என நினைக்கிறார்கள். அதாவது நினைத்தது நிறைவேறனும், தான் சொல்வதே நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர் கருத்துக்களை ஏற்க விரும்புவது இல்லை. தோல்வி, அவமானங்களை கடக்க விரும்புவது இல்லை. வாழ்க்கையின் பாடங்களை சுத்தமாக விரும்புவதே இல்லை. அப்படிதான் பலர் இருக்கிறார்கள்.

இண்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் வந்த பிறகு, ஒரு சிறிய தேடலில் தகவல் கிடைப்பது முதல், பசித்தால் உணவு வருவது வரை எல்லாமே விரல் நுனியில் இருக்கிறது. இதனால் எதற்கும் 'காத்திருக்கும் பொறுமை' இயல்பாகவே குறைந்துவிடுகிறது. இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் மற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள 'வெற்றிகள்' மற்றும் 'அழகான தருணங்களை' மட்டுமே அவர்கள் உண்மை என்று பார்க்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் உள்ள போராட்டங்கள், தோல்விகள் மற்றும் அவமானங்கள் அங்கே காட்டப்படுவதில்லை. இது ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி, நிஜ வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் போது அவர்களைத் தடுமாறச் செய்கிறது.
பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவித்துவிடக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கு வரும் சின்ன சின்ன தடைகளை கூட தாங்களே நீக்கிவிடுகிறார்கள். இதனால் பிள்ளைகளுக்கு 'தோல்வியைக் கையாளும் பக்குவம்' வளர வாய்ப்பில்லாமல் போகிறது.. காதல் முதல் கல்லூரி படிப்பு கடினம், வேலை வரை பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாதவன் என்பவருடைய மகன் அபிக்கு 23 வயது ஆகிறது. . இவர் கேரள மாநிலத்தில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அபி வந்துள்ளார்.
அபி வீட்டிற்கு வந்தது முதலே யாரிடமும் சரிவர பேசாமல் மவுனமாக இருந்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அபி நள்ளிரவு 12 மணிக்கு திரும்பியிருக்கிறார். அப்போது அவர் தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு தனது அறையில் படுக்கச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் அறை கதவைத் திறந்து பார்த்த போது அபி இருந்த நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தவறான முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அபி இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகவும், தற்போது காதலி திடீரென பேசுவதை நிறுத்தியதால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, காதலி பேசாததால் அவர் விபரீத முடிவெடுத்தது வாழ்க்கையை முடித்துக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து உடலை பேச்சிப்பாறை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக பேச்சிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி பேசாததால் வாலிபர் தவறான முடிவெடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications