கன்னியாகுமரியில் அதிகாலையில் குளியலறையில் ஸ்ரீஜாவின் கோலம்.. மிஸ்ஸான 35 பவுன் தங்கம்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகத்தறை பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் வெளிநாட்டில் கொத்தனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா கன்னியாகுமரியில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ஸ்ரீஜா தனது சித்தி மகனுக்கு 35 பவுன் தங்க நகைகளை இரவலாக கொடுத்துள்ளார். அப்படி வாங்கிய நகையை திரும்ப தராமல் ஏமாற்றினாராம். இதனிடையே வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவரது கணவர் நகையை கேட்டநிலையில், ஸ்ரீஜா எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகத்தறை பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் வெளிநாட்டில் கொத்தனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீஜாவுக்கு 37 வயது ஆகிறது. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். வடிவேல் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்த பணத்தில் மனைவிக்கு தாலி சங்கிலி உள்பட 35 பவுன் நகைகள் வாங்கி கொடுத்துள்ளார்.

What happened to Sreeja in the bathroom after giving gold to her stepson in Kanyakumari

35 சவரன் தங்கம்

இந்தநிலையில் வடிவேலின் வீட்டின் அருகே உள்ள ஒரு உறவினருக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வடிவேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு மனைவி ஸ்ரீஜாவிடம் அனைத்து நகைகளையும் எடுத்து வைக்கும்படி கூறியிருக்கிறார். அப்போது ஸ்ரீஜா நகைகள் தன்னிடம் இல்லை என்றும் தனது சித்தி மகனுக்கு இரவலாக கொடுத்தாகவும் கூறியிருந்தார்.

சித்தி மகனிடம் இருக்கிறது

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சித்தி மகனுக்கு கொடுத்த நகைகளை எல்லாம் திரும்ப வாங்கும்படி வடிவேலு கூறியிருக்கிறார். அதற்கு, விடிந்ததும் காலையில் நகைகளை கொண்டு வந்து தருவதாக சித்தி மகன் கூறி உள்ளதாக ஸ்ரீஜா தெரிவித்தார். இதையடுத்து இருவரும் தூங்க சென்றுள்ளார்.

ஸ்ரீஜா இருந்த கோலம்

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வீட்டின் குளியல் அறையில் இருந்து ஸ்ரீஜா அலறினார். இதனால் கண்விழித்த கணவர் அங்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது ஸ்ரீஜா உடல் முழுவதும் தீ எரிந்தது. அவர் காப்பாற்ற முயல்வதற்குள் ஸ்ரீஜா உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியிருக்கிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீஜா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரைவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தான், ஸ்ரீஜா நகைகளை இரவலாக கொடுத்த விஷயம் தெரியவந்தது. இதுபற்றி அவரது சித்தி மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரூ.50 ஆயிரம் மட்டும் தான் கடனாக வாங்கி இருந்ததாகவும், நகைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

ஸ்ரீஜா கணவருக்கு தெரியாமல் யாருக்கோ தனது நகைகளை கொடுத்ததாகவும். அந்த நபர் நகையை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இந்த தகவல் கணவருக்கு தெரிந்தால் தகராறு செய்வாரே என்ற அச்சத்தில் உயிரைவிட்டதும் தெரியவந்ததுள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+