"இயேசு" கிட்ட ஸ்ட்ரைட்டா பேசறோம்.. ஆன்லைன்ல சாப்பாடு.. பகீரை கிளப்பிய கன்னியாகுமரி.. யாரிந்த 4 பேர்?
கன்னியாகுமரி: 3 வருடங்களாகவே உயிருக்கு பயந்துகொண்டு, வீட்டுக்குள் அடைபட்டுக் கொண்டிருந்திருக்கிறது அந்த குடும்பம்.. சாப்பாட்டை எல்லாம் ஆன்லைன்லையே ஆர்டர் செய்தும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஓல்ட் ஸ்டேட் பாங்க் (OLD STATE BANK) காலனி தெருவில் வசித்து வருபவர் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்.. இவரது மனைவி பெயர் மாலதி.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

2 மகள்கள்: இந்த 2 மகள்களையும், பெர்ஷியஸ் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்திருப்பதாகவும், கடந்த 3 வருடங்களாக வெளியே விடவில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரிக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தந்துள்ளனர்.. இதையடுத்து, தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாரை உதவிக்கு அழைத்துக்கொண்டு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி அந்த வீட்டிற்கு சென்றார்.
ஆனால், வீடு அப்போது பூட்டப்பட்டிருந்தது.. இதனால், அக்கம்பக்கத்தில் விசாரித்தால், யாருமே சரிவர பதிலை சொல்லவில்லை.. அதனால் வீட்டின் முன்பு நின்றுகொண்டு அழைத்திருக்கிறார்.. அப்போதும் பதில் எதுவும் வரவில்லை.. அதனால், உடனடியாக தீயணைப்புத் துறையினரை வரவழைத்தார்.. அவர்களும் விரைந்து வந்து, காம்பவுண்ட் கேட்டை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தனர்.. வீட்டின் மதில் ஏறி குதித்து உள்ளேயும் புகுந்தனர்.. மற்றொருபுறம் போலீஸார், அந்த வீட்டை சுற்றி ரவுண்ட் அப் செய்துவிட்டு, கதவை தட்டினார்கள்.

ஆன்லைன் சாப்பாடு: இதையடுத்து வேறுவழியில்லாமல், வீட்டுக்குள்ளிருந்து 4 பேருமே வெளியே வந்தார்கள்.. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால், முன்னுக்கு பின் முரணான பதில்களை 4 பேருமே தந்திருக்கிறார்கள்.. இவர்களுக்கு சொந்தமாக கடைகளை உள்ளதாம்.. அந்த வாடகைக்குவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில், குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.. மளிகை, காய்கறிகள் வாங்க வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டியிருக்கும் என்பதால், ஆன்லைனிலேயே சாப்பாட்டை ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்ததுள்ளனர்.
மர்மநபர்கள்: "ஏன் வீட்டுக்குள் இருந்து வெளியே வராமல் இருக்கிறீர்கள்?" என்று அதிகாரிகள் கேட்டதற்கு, "எங்களுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது.. எங்களை திட்டமிட்டு கொலை செய்ய மர்ம நபர்கள் மறைந்து இருக்கிறார்கள்" என்று மட்டும் பதிலளித்துள்ளனராம்.. அதுமட்டுமல்ல, நேரடியாகவே இறைவன் இயேசுவிடம் பேசுவதற்கான பிரார்த்தனையில் தாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் போலீசாரிடம் சொல்லி உள்ளனர்..

தாங்கள் நலமாக இருப்பதாகவும், எந்த பிரச்னையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.. இதுபோன்று அத்துமீறி வீட்டில் புகுந்து விசாரணை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என்றும் போலீசாரிடமும் செய்தியாளர்களிடமும் வாக்குவாதத்திலும் அவர் ஈடுபட்டதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைலைட்: இந்த சம்பவம் குறித்து, சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி சொல்லும்போது, "அவர்களுக்கு மருத்துவ உதவி, கவுன்சிலிங் தேவைப்படுகிறது. அவர்களின் நண்பர் ஒருவர் மனநல மருத்துவராக உள்ளார்... அவர்மூலமாக பேசி அவர்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கி உள்ளோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால், சம்பந்தப்பட்ட பெர்சியஸ் அலெக்ஸாண்டர் ஒரு வழக்கறிஞராம்.. அவரது 2 பெண்களும், பட்டப் படிப்புகள் முடித்தவர்களாம்..!!!












Click it and Unblock the Notifications