பெட்ரூமில்.. வீடியோ காலில்.. கணவருடன் பேசிக் கொண்டே.."பை பை" சொல்லி.. பதற வைத்த மனைவி.. ஷாக்!

கணவனிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டே விஷம் அருந்தி இறந்துவிட்டார் மனைவி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: வீடியோ காலில் கணவரை பார்த்து கொண்டே, "பை பை" சொல்லி.. மளமளவென விஷத்தை எடுத்து குடித்துவிட்டார் மனைவி.. இப்படி ஒரு சோக சம்பவம் கன்னியாகுமரியில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ளது அமராவதி விளை.. இங்கு வசித்து வருபவர் செல்வராஜ்... இவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

Wife commits suicide while talking to her husband through video call

இவருக்கு கல்யாணமாகி ஐந்தரை வருஷமாகிறது.. மனைவி பெயர் ஆக்னஸ் நந்தா.. 31 வயதாகிறது.. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.. செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், ஆக்னஸ் நந்தா, குழந்தைகளுடன் அம்மா வீட்டில்தான் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தம்பதிக்குள் 2 நாட்களாக சண்டை போலும்.. அதனால் செல்போனிலேயே இவர்கள் இருவரும் சண்டை போட்டு வந்தனர்.. வீடியோ காலில்தான் மொத்த தகராறும் நடந்துள்ளது.. அப்படித்தான் நேற்றும் செல்வராஜும், நந்தாவும் வீடியோ காலில் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிவிட்டது.

அதனால், ஆத்திரம் தாங்காமல் நந்தா, திடீரென கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்து குடித்துவிட்டார்.. அப்போது செல்வராஜுக்கு பை.. பை என்று சொல்லிக்கொண்டே செல்போன் இணைப்பை கட் செய்தார்.. வீடியோ காலில் இதை பார்த்து பதறி அலறினார் செல்வராஜ்.. ஆனால், அடுத்த செகண்டே கீழே மயங்கி விழுந்தார் நந்தா.

செல்வராஜ் உடனே உறவினர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், அவர்கள் பெட்ரூமில் வந்து பார்த்த போது, நந்தா வாயில் நுரைதள்ளிய படி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பிறகு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் நந்தாவை காப்பாற்ற முடியவில்லை. பரிதாபமாக அவர் உயிர் பிரிந்தது.. அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ள போலீசார், இந்த தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆக்னஸ் நந்தாவின் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+