கன்னியாகுமரி ரிசார்ட்டில் நள்ளிரவு விருந்தில் மனைவிகளை மாற்றி உல்லாசம்.. பார்ட்டியில் சிக்கிய விஐபி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடத்திய பிறந்தநாள் விழா பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. இதுதொடர்பாக நடந்த போலீஸ் ரெய்டானது, அதற்கு மேல் பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.. விடிய விடிய மது போதை விருந்தை நடத்தியவர்கள் யார்? பின்னணி என்ன?
அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடப்பதாகவும், அங்கே அரசால் தடை செய்யப்பட்ட உயர் ரக போதைப் பொருட்களுடனும், வெளிநாட்டு மதுபானங்களுடனும் விடிய விடிய பார்ட்டி நடப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கன்னியாகுமரி நாகர்கோவில்
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் அந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர்.. அதிரடியாக உள்ளே நுழைந்து தீவிர விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போது, பெருமளவு போதைப் பொருட்கள் அங்கு கைப்பற்றப்பட்டன.. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குலசேகரத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன், அவரது மனைவி சவுமி, தம்பி கோவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. இவர்கள் 8 பேருமே ஜெயிலில் உள்ளனர். இவர்களிடம் மேலும் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்பதால் போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
ரிசார்ட்டில் விருந்து
இந்த விழா இந்த அளவுக்கு பரபரப்பை தர காரணம் கோகுல் கிருஷ்ணன் என்பவர்தான்.. இவர் முன்னாள் எம்எல்ஏவின் பேரன் ஆவார்..
கோகுல் கிருஷ்ணன் குடும்பம் கடந்த 5 வருடங்களாகவே "ஈவன்ட் ஆர்கனைசர்" என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்கள்.. இந்த நிறுவனம் மூலம் பல மாநிலங்களில் உள்ள ரிசார்ட்டுகள், சொகுசு லாட்ஜ்கள், பீச் ரிசார்ட்டுகள் போன்ற இடங்களை சீசனுக்கு ஏற்ப அக்ரிமெண்ட் செய்து கொள்வார்களாம்..
கோகுல் கிருஷ்ணன் மற்றும் அவரது தம்பி கோவிந்த கிருஷ்ணா இருவரும் சேர்ந்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, போலீஸ் கெடுபிடிகள் இல்லாத இடங்களை தேர்ந்தெடுத்து, ரிசார்ட்டுகள் அல்லது சொகுசு விடுதிகளை ஒப்பந்தம் செய்வார்கள்.
மனைவிகளை மாற்றி
கல்ச்சுரல் ப்ரோக்ராம் என்ற பெயரில் விழாக்களை நடத்தி, வெளிநாட்டு பானங்கள், உயர்ரக போதை பொருட்கள், டான்ஸ் நிகழ்ச்சிகள், சட்டவிரோத செயல்கள் என அனைத்தையுமே நடத்தியிருக்கிறார்.
குறிப்பாக, போதையின் உச்சத்தில் கணவன் மனைவி மாறி மாறி உடலுறவில் ஈடுபடும் அதிர்ச்சி நிகழ்வுகளும் நடந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஆசையைத் தூண்டும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டு, பலரையும் பார்ட்டியில் பங்கேற்க வைத்துள்ளார். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள், குடும்ப சுமையால் விரக்தியாக இருப்பவர்கள், தனிமையில் வாழ்பவர்கள் போன்றவர்கள் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்கள்.
விஐபிகள் - குமரி ரிசார்ட்
நுழைவு கட்டணமாக ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.. பார்ட்டிக்குள்ளே சென்றதுமே, நிகழ்ச்சிகளை பொறுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது கோகுல கிருஷ்ணன் ஒரு பார்ட்டியை நடத்தினால், 25 முதல் 50 லட்சம் வரை லாபம் சம்பாதித்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்போதைக்கு குமரி ரிசார்ட்டில் நடந்த சோதனையில் 2 சொகுசு கார்கள், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்கள், எம்டிஎம்ஏ, எல்எஸ்டி, கொகைன், மார்பின் போன்ற பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை யார் மூலம் வந்தது? எந்த புரோக்கர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு திரைமறையில் சில விஐபிக்கள் தொடர்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால், மாவட்டத்தில் மேலும் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் ரகசிய விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications