திவ்யா வாயில் பாதரசத்தை ஊற்றினேன்.. பதறவைக்கும் பேராசிரியை கொலை.. கணவரின் அதிரவைக்கும் வாக்குமூலம்
உப்புமாவில் விஷம் வைத்து பேராசிரியையை கொன்றதன் பின்னணி வெளியாகி உள்ளது.
Recommended Video

நாகர்கோவில்: "பாதரசத்தை திவ்யா வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினேன்" என்று உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த பேராசிரியை கொலைக்கான பகீர் பின்னணி காரணமும் இப்போது தெரியவந்துள்ளது.
கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சில்வஸ்டர். இவருக்கும் பெல்லார்மின் என்பவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவன் பெல்லார்மின் வேறு ஒரு பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது. அதனால் திவ்யாவை விவாகரத்து செய்துவிட்டு போகும்படி சொல்லி உள்ளார்.

விவாகரத்து
அதற்கு திவ்யா மறுப்பு சொல்லவும் ஒரு கட்டத்தில் காதலிக்கும் பெண்ணைதான் கல்யாணம் செய்ய போகிறேன், விவாகரத்து செய்துவிட்டு போ என்று மிரட்ட ஆரம்பித்துள்ளார் பெல்லார்மின். ஆனால் திவ்யாவோ, பல லட்சம் ரூபாய் செலவழித்து வீட்டில் கல்யாணம் செய்து வைத்துள்ளதால், விவாகரத்துதர மனமில்லாமல் இருந்திருக்கிறார்.

பாதரசம்
இதனால் ஆத்திரமடைந்த பெல்லார்மின் சில வாரங்களுக்கு திவ்யாவின் வாயில் பாதரசத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அதை திவ்யா தட்டிவிடவும், அந்த பாதரச துளிகள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளில் பட்டு அது உருகி உள்ளது. இதையெல்லாவற்றையும் திவ்யா அவரது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

உப்புமா
எனினும் திவ்யா தொடர்ந்து விவாகரத்து தர மறுக்கவும்தான் சாப்பாட்டில் விஷம் வைப்பது என முடிவு செய்தார் பெல்லார்மின். திவ்யாவுக்கு உப்புமா வாங்கி வந்து அதில் விஷத்தை கலந்து சாப்பிட தந்துள்ளார். தான் என்ன சாப்பிட்டாலும் அதை வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்கு கொஞ்சம் தருவது திவ்யாவின் பழக்கமாம்.

நாய் இறந்தது
அதனால் நேற்றும் அப்படித்தான் உப்புமா தந்திருக்கிறார். பிறகுதான் திவ்யா சாப்பிட்டுள்ளார். ஆனால் உப்புமாவை சாப்பிட்ட நாய், திவ்யா கண்ணெதிரிலேயே வாயில் ரத்தம் வழிந்து விழுந்து இறந்துள்ளது. திவ்யா ஆஸ்பத்திரியில் உயிரிழந்ததையடுத்து, அவரது தந்தை சில்வெஸ்டர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் பெல்லார்மின் , மாமியார் மாமனார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications