வாக்கு எண்ணிக்கை முடியட்டும்... மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்... செந்தில் பாலாஜி பேச்சு

Subscribe to Oneindia Tamil

அரவக்குறிச்சி: மே 23 ஆம் தேதிக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்று முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி வேட்பாளருமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

After May 23, MK Stalin will be the Chief Minister Says DMK Candidates Senthil Balaji

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கப்படுவார் என்றும், மே 23ஆம் தேதிக்குப் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

100 நாள் வேலை செய்பவர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய செந்தில் பாலாஜி, திமுக வெற்றி பெற்றால் அதை மாற்றி உடனுக்குடன் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றும் வேட்பாளர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். அமமுகவில் இருந்து பிரிந்து வந்த செந்தில் பாலாஜிக்கு திமுக சார்பில், சீட் தரப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு அரசியல் எதிரியாக பார்க்கப்படும் சாகுல் ஹமீதுவை, அமமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+