தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு:விழுப்புரம் போல கரூர் கோவிலுக்கு பூட்டு போட்டு அதிகாரிகள் அதிரடி!
கரூர்: விழுப்புரம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலைப் போல கரூர் அருகே வீரணம்பட்டியில் தலித்துகளை அனுமதிக்காத காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த தலித் மக்கள் வழிபடுவதற்கு அங்குள்ள ஒரு சமூகப் பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 8-ந் தேதி திரவுபதி அம்மன் கோயிலில் வழிபட வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் மற்றொரு சமூகப் பிரிவினரால் தாக்கப்பட்டார். அதைத் தடுக்க முயற்சித்த கந்தன், கற்பகம் ஆகியோரும் தாக்கப்பட்டனர். அது தொடர்பாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இப்பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் 2 மாதங்களாகப் பல நடவடிக்கைகள் எடுத்தது. இந்தப் பகுதியைச் சார்ந்த மயிலம்,விக்கிரவாண்டி, விழுப்புரம் எம்.எல்.ஏக்கள், விழுப்புரம் எம்பி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது . கோட்டாட்சியர் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. ஆனாலும் கூட இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.
இந்நிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145 (1) இன் கீழ் விழுப்புரம் கோட்டாட்சியர் முதல்நிலை உத்தரவைப் பிறப்பித்து மேல்பாதி அருள்மிகு திரவுபதி அம்மன் கோயிலின் வாயிலை இன்று காலை பூட்டி சீல் வைத்துள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கரூர் மாவட்ட வீரணம்பட்டி காளியம்மன் கோவிலிலும் இதேபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் தலித்துகளை அனுமதிக்க முடியாது என ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காளியம்மன் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞர் அனுமதி மறுக்கப்பட்டு வெளியே தள்ளிவிடப்பட்டார். இது தொடர்பாக இரு ஜாதியினரிடையே பிரச்சனை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளிடம் தலித் மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் மாவட்ட வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வீரணம்பட்டிக்கு விரைந்து சென்றனர். இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனையடுத்து வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டி பூட்டிவிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு பறையர் பேரவை வெளியிட்டிருந்த அறிக்கையில், கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டி என்னும் ஊரில் இருக்கும் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள எட்டு ஒவ்வொரு கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடும் திருவிழா. கோவில் அமைந்திருக்கும் உள்ளூர் வீரணம்பட்டியில் பறையர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ச்சியாக சாதிய பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. பறையர்களை கோவிலுக்குள் நுழைவதனை அனுமதிப்பதில்லை. இன்று அந்த கோவிலுக்குள் நுழைவதற்காக சென்ற இளைஞரை சட்டையை பிடித்து கோவிலுக்குள் வரக்கூடாது என்று வெளியே தள்ளியிருக்கிறார்கள். சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்ட போதும் கொடுக்க மறுக்கிறார்கள். தமிழ்நாடு பறையர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. கோவில் அனைவருக்கும் சமம் என்று வரும் வரை கோவிலை சாதியவாதிகள் பயன்படுத்துவதை தடை செய் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications