Vijay | விஜய்யின் பஸ்சை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரலாம்.. தயார் நிலையில் தனிப்படை போலீஸ்
கரூர்: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூரில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில் விஜய்யின் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்ற உத்தரவின் காரணமாக, உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வரும் நிலையில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நாமக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பரப்புரை வாகனம், முதலில் நாமக்கல் வந்தது. அதில் ஏறித்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தனது பிரச்சார வாகனத்தில் பயணித்த படியே, அங்கிருந்து கிளம்பி வந்த விஜய், கரூர் நோக்கி வந்தார். இதன்படி நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழியில் தவுட்டுப்பாளையம் போலீஸ் சோதனைச்சாவடி அருகே மாலை 4 மணியளவில் விஜய்யின் பிரசார பேருந்து சென்று கொண்டு இருந்தது.

அப்போது அவரை தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தபடி வந்தார்கள். அதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விஜய்யின் பிரச்சார பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் விஜய்யின் பிரச்சார பஸ் நிற்காமல் அங்கிருந்து சென்றது. நல்ல வேளையாக இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் அப்போது பரவியது.
இந்நிலையில் விபத்தினை தொடர்ந்து விஜய்யின் பிரச்சார பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடந்த வாரம் வழக்கு ஒன்றில் கேள்வி எழுப்பினார். அதாவது கூட்ட நெரிசல் நடந்த இடத்தில், விஜய்யின் பிரச்சாரப் பேருந்து சம்பந்தப்பட்ட 'மோதிவிட்டு நிற்காமல் செல்லும் வழக்கு' பதிவு செய்யப்படாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதேபோல் விஜய்யின் பிரச்சாரப் பேருந்தின் அடியில் இருசக்கர வாகனங்கள் சிக்கிக் கிடக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. ஓட்டுநர் அதைப் பார்த்தும் ஏன் நிறுத்தவில்லை. இது மோதி விட்டுச் செல்லும் வழக்கு இல்லையா? ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை?" என்று நீதிபதி காவல்துறையிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தார்.
மேலும் கரூர் விபத்து தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, விஜய்யின் பிரச்சாரப் பேருந்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், பேருந்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி காட்சிகளைப் கைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய ஏட்டு தெய்வபிரபு புகார் அளித்தார். பேரில் த.வெ.க. பிரச்சார பஸ் டிரைவர் மீதும், மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த த.வெ.க. தொண்டர்கள் 2 பேர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் உயர் அதிகாரிகளிடம் இருந்து விஜய்யின் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்ய எந்த நேரத்திலும் உத்தரவு வர வாய்ப்பு உள்ளதாம். அப்படி உத்தரவு வந்தவுடன் அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படைபோலீசார் சென்னையில் உள்ள போலீசாரின் உதவியுடன் விஜய்யின் பிரச்சார பஸ்சை பறிமுதல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா











Click it and Unblock the Notifications