ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

கரூர்: லீடர்ஸ் அமைப்பில் இதுவரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, ஜூலை மாதம் முதல் இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கும் என்றும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்கும் புதிய அரசியல் சக்தியாக இந்த அமைப்பு உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புற வளர்ச்சி, விவசாய முன்னேற்றம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை மையமாகக் கொண்டு தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அண்ணாமலை பேசியதாவது: ஜூன் 5 ஆம் தேதி அறைகூவல் விடுத்தேன். வீ த லீடர்ஸ் இயக்கத்தில் நீங்கள் எல்லாம் சேர வேண்டும், நல்ல அரசியல் இயக்கத்தை தொடங்குவோம். அதில் இருந்து அரசியல் கட்சியை உருவாக்குவோம். இன்றைக்கு 18 லட்சம் பேர் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரிய நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் இணைந்திருக்கிறீர்கள். பெரிய மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள். அதற்கு நான் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

annamalai-announces-political-action-from-july-we-the-leaders-membership-crosses-18-lakh

இந்த இயக்கத்தில் வந்து சேருமாறு நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு முன்பு நான் சார்ந்திருந்த கட்சியில் இருந்தும் யாரையும் அழைக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், ஃபாலோவர்ஸ் என யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. மக்கள் எல்லோரும் தானாக வந்து இணையட்டும். ஓடிபி (OTP) மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்தும் இயக்கம் நாம் தான். நம்மைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். லட்சக்கணக்கானோர் அதை விரும்பவில்லை. சரியான பாதையில் தான் நம் இயக்கம் சென்று கொண்டிருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அற்புதமான மனிதர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இப்போதைக்கு 'வீ த லீடர்ஸ்' ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

அரசியல் கட்சியாக மாறிய பிறகு, அதன் தன்மை தீவிரமாக வேறு மாதிரி இருக்கும். ஜூலை மாதம் முதல் மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள். பெரிய நம்பிக்கை, கனவுளோடு நிச்சயம் இந்த இயக்கம் பொய்க்காது, பொய் சொல்லாது, தவறான வழியில் அழைத்துச் செல்லாது என்று வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலுக்கு வந்தது ஏன்..

ஒரு கிராமத்தில் வாழும் போது எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை என்பது சிறிய வயதில் இருந்தே அனுபவித்துள்ளேன். இந்த நிலைமை வேறு யாருக்கும் வந்து விடக் கூடாது. விவசாயத்தை மட்டும் நம்பியே வாழ்க்கை இருந்தது. கிராமப்புறத்தில் ஒவ்வொரு பள்ளிகளாக மூடி வருகின்றனர். அப்படியானால் கிராமப்புறத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு கல்வி வாய்ப்பே இல்லை. நகர்ப்புறத்திற்கு எல்லாரும் நகர்ந்து விட்டது. வாழ்க்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து தான் அரசியல் மற்றும் பொதுச்சேவைக்கு வர வைத்தது.

நாங்கள் இருக்கக்கூடிய இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொட்டம்பட்டி எனும் சிறிய ஊர் இது. வேலூர், திருத்தணியில் இருக்கும் வெப்பம், அரேபிய நாடுகளுக்கு இணையான வெயில் எங்களின் கிராமத்தில் நிலவுகிறது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாது என்று உணர்ந்த என்னுடைய பெற்றோர், எப்படியாவது படித்து இந்த ஊரில் இருந்து தப்பித்து போய்விடு என்று சொன்னார்கள். ஆனால், எல்லா பக்கமும் சுத்தி அடித்து விட்டு, 2020 இல் போலீஸ் பதவியை துறந்துவிட்டு இந்த ஊருக்கு தான் வந்தேன்.

8.8 லட்சம் ஏக்கர் நிலங்கள்

விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவில் இங்கு வந்தேன். பெரும் முயற்சியை மேற்கொண்டேன். பெரிய கனவோடு தான் வந்தேன். ஆனால், மண்ணின் தன்மை, மழையளவினால் நான் எதிர்பார்த்த விவசாயத்தை செய்ய முடியவில்லை. தமிழகத்தில் 8.8 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியும். ஆனால், செய்வதில்லை. கரூரில் மட்டுமே 1.8 லட்சம் நிலங்கள் உள்ளன. ஆனால், பண்ண முடியவில்லை.

காரணம் வறட்சி, மண்ணின் தன்மை உள்ளிட்டவை தான். விவசாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே கரூருக்கு வந்து 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கினேன். இப்பகுதியில் வருமானம் கொழிக்கும் முருங்கை விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து போனது. எனவே, ஒரு 1000 முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கலாமா? என்று தான் 'வீ த லீடர்ஸ்' அமைப்பை துவங்கினேன். அப்படி தான் கரூர் மாவட்டத்தை சுற்றி 'வீ த லீடர்ஸ்' அலுவலகங்களை அமைத்துள்ளேன்.

இதுவரை 18 லட்சம் பேர்

We The Leaders இயக்கத்தில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான நண்பர்கள் இணைந்து பணியாற்றப் போகிறோம். 'வீ த லீடர்ஸ்' அமைப்பில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தையல் பயிற்சி பெற்றனர். அனைத்து மதத்தினருக்கும் நாம் சமமாக இருப்போம். அவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கூட நான் பங்கேற்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போட்டோவை வைத்து அந்த சகோதரிக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் என்று பேசினார். தொடர்ந்து, கால்நடைகள், மரங்கள் மற்றும் வசதிகள் குறித்தும் விளக்கமாக கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+