"காலில் விழுந்த பிறகு கர்சீப் எதுக்கு?" ஸ்டாலின் தாக்கு! எடப்பாடி பற்றி சொன்னதும் உதயநிதி ரியாக்ஷனை பாருங்க
கரூர்: திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத எடப்பாடி பழனிசாமி, அதிமுகவையே அமித்ஷாவிடம் எழுதிக் கொடுத்துவிட்டதாகச் சாடியுள்ளார்.
கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா இன்று நடந்தது. அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்படும். அதன்படியே இந்தாண்டு கரூரில் இந்த விழா நடைபெற்றது. இதில் திமுகவினர் அதிகளவில் கலந்து கொண்டனர்.

ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், அடுத்தாண்டு நடக்கும் தேர்தலுக்குத் திமுகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும் திமுக தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு வஞ்சித்தாலும் அதைத் தாண்டி தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கூட்டத்தில் அவர் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி மீது தாக்கு
ஸ்டாலின் மேலும் பேசுகையில், "ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தேம்பும் திராணியும் இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். இப்போதும் பாஜக தன்னுடன் இருக்கிறது என்று வாய்க் கொழுப்போடு பேசிக்கொண்டு இருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு கூட இல்லாமல் என்னை ஒருமையில் பேசிக் கொண்டு இருக்கிறார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்களே எடைபோட்டுப் பார்த்துக் கொள்வார்கள். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவையே அடகு வைத்துவிட்டார்.
அடிமையிசம் தான் கொள்கையாம்
திராவிடம் என்றால் என்ன என்று கேட்டால் அதெல்லாம் எனக்குத் தெரியாது என சொன்னவர் தான் அவர். திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அவர் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பதுதான் வெட்கக்கேடு. அதிமுக தொடங்கப்பட்ட போது அண்ணாயிசம் தான் கொள்கை என்றார்கள். அதை இப்போது அடிமையிசம் என மாற்றி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார் பழனிசாமி.
முகத்தை மூட கர்சீப் எதுக்கு?
முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு எனக் கேட்பார்கள். அதுபோல தான் நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியை பார்த்து இப்போது எல்லாரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.. காலிலேயே விழுந்த பிறகு இப்போது முகத்தை மூட கர்சீப் மட்டும் எதுக்கு என்றே கேட்கிறார்கள். அப்படிப்பட்ட நபரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை" என்றார். எடப்பாடியை பற்றி முதல்வர் ஸ்டாலின் இப்படிச் சொன்னவுடன் மேடையில் இருந்த உதயநிதி சட்டென சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இதைப் பார்த்தவுடன் தொண்டர்கள் மேலும் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.
டெல்லிக்கு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டம் முடிந்துவிட்டு வெளியே வரும்போது எடப்பாடி பழனிசாமி கர்சீப் மூலம் முகத்தை மூடியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் நேற்றே இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. மேலும், அரசியல் அரங்கிலும் அது விவாதமாக வெடித்து. இப்போது அதைக் குறிப்பிட்டே முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications