இருக்குறதுலேயே வொர்ஸ்ட்! இளையராஜா கச்சேரிக்கு வந்த ரசிகர்கள் டிக்கெட்டை கிழித்து எறிந்து ஆக்ரோஷம்
கரூர்: கரூரில் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உட்கார இடம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்து போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாவின் இசை ராஜாங்கம் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா இசைக் கச்சேரி நேற்று நடந்தது. கரூரில் திருச்சி பைபாஸில் உள்ள ஸ்ரீகாமாட்சி சேவா சங்க அறக்கட்டளை மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

சுமார் 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு diamond, platinum, gold, silver, general category என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

முதல் வரிசையில் மிகவும் முக்கியஸ்தர்களுக்கும் 2ஆவது வரிசையில் விவிஐபிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு டயமன்ட், பிளாட்டினம், கோல்டு, சில்வர், ஜெனரல் டிக்கெட் வாங்கியவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பொது கேட்டகிரிக்கு ரூ 500 டிக்கெட் வசூலிக்கப்பட்டது. பிளாட்டினம் கேட்டகிரிக்கு ரூ 3000 வசூலிக்கப்பட்டது. அதாவது ரூ 500 முதல் ரூ 50 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யவில்லை என தெரிகிறது. 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் உட்கார இடம் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் 3 மணி நேரம் சிலர் நின்று கொண்டே பார்த்தனராம்.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், Seating capacity 1000 என்றால் 5000 டிக்கெட்டுகளை விற்றால் மற்றவர்கள் எப்படி உட்காருவது என கேள்வி எழுப்பினர். என் குடும்பத்தினர் 13 பேருக்கு ரூ 3000 கொடுத்து பிளாட்டினம் டிக்கெட் வாங்கினேன்.

தண்ணீர் வசதி இல்லை. நாங்கள் பிளாட்டினம் டிக்கெட் வாங்கியும் கோல்டு டிக்கெட்டில்தான் அனுப்பினார்கள். இத்தனை கேவலமாக ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றால் அது இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். இருக்கிறதிலேயே இது மிகவும் மோசமான நிகழ்ச்சி என கூறிய அந்த ரசிகர், தன்னிடம் இருந்த டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து விட்டு சென்றார்.

-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications