கமல்ஹாசன் பிரச்சார கூட்டத்தில் இஸ்லாமியர்கள் குவிந்தனர்... கடும் கூட்ட நெரிசல்
Recommended Video
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசனை காண, ஏராளமான இஸ்லாமியர்கள் குவிந்தனர். இதனால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், தென்னிலை பகுதியில் அரவக்குறிச்சி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
|
மாற்றம் நிச்சயம்
அப்போது, இதுவரை இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களின் கூட்டம் இருந்தது. கூட்ட நெரிசலால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் திண்டாடிப் போயினர். கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், அரசியல் புரட்சியின் விளிம்பில் நிற்கிறோம், நேர்மையோடு வாக்களியுங்கள் மாற்றம் நிச்சயம் வரும் என்றார். இதனனைக் கேட்டு அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

சாதி, மதம், பேதமில்லை
நாடே திரண்டு சுதந்திரம் வாங்கியது, ஆனால் அந்த நாடு ஏன் இப்படி ஆனது? என அனைவரும் யோசிக்க வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், அதை திருத்துவதற்கான கருவி நாம் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும், அப்படி செய்தால் நாளை நமதே என்றார். மேலும், மக்கள் நீதி மய்யத்தில் சாதி, மதம், பேதமில்லை; அன்பு, பாசம் மட்டுமே இருக்கிறது என்றும் பேசினார்.

ஆர்ப்பாட்டம்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் பேசியது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், கமல்ஹாசன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலாயுதம்பாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

காலணி வீச்சு
நேற்று, திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு சென்ற கமல்ஹாசனை நோக்கி காலணி வீசிய பாஜகவினரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கருத்து தொடர்பான வழக்கில் கமல்ஹாசனின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications