கலங்கும் கரூர்.. விஜய் ரசிகர்கள் RCB ரசிகர்கள் போல.. கட்டுக்கடங்காமல்.. விதிமுறையும் மதிக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார கூட்டத்திற்கு ஏராளமான ராசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் நெரிசல் காரணமாக மயக்கமுற்று கவலைக்கிடமாக உள்ளனர். விஜய் ரசிகர்களை பொறுத்தவரை பெங்களூர் ஆர்சிபி ரசிகர் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில் பெங்களுரை போல் மிகப்பெரிய மோசமான அசம்பாவிதம் கரூரில் நடந்துள்ளது.

நடிகர் விஜய் பங்கேற்கும் ஒவ்வொரு பரப்புரையிலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் பங்கேற்று வந்தார்கள். விக்கிரவாண்டி, மதுரை, கோவை, திருச்சி, அரியலூர், நாகை என எந்த ஊர் கூட்டத்தில் ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவில்லை என்ற புகார்களை ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக ஆகியவை வைத்து வந்தன.

Karur incident Vijay fans are unruly and do not respect the rules like RCB fans

விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், பல கிமீ நீளத்திற்கு கூட்ட நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் இருந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. மேலும் மரத்தில் ஏறுவது, டவரில் ஏறுவது, சுவரில் ஏறுவது, கண் மூடித்தனமாக விஜய்யை பார்க்க வந்த இடத்தில் நடந்து கொள்வது என குற்றச்சாட்டுகளில் பல உண்மையில்லாமல் இல்லை.. ஏனெனில் விஜய் இதுவரை பங்கேற்ற எல்லா சனிக்கிழமை பிரச்சாரங்களிலும் ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் திரளாக வந்தார்கள்.

விஜய்யை பார்க்க சாப்பிடாமல் கூட காலையில் இருந்த காத்துக்கொண்டிருப்பதாக கூட பல ரசிகர்கள் பேட்டி அளித்திருக்கிறார்கள். பள்ளி விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் நடிகர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததால், ஏரளமான பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பிரச்சாரத்தை காண வந்தனர். இதனால் விஜய்யை எதிர்பார்க்காத அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வந்தது. ஆனால் கூட்ட நெரிசல் எதுவும் கடந்த வாரம் வரை எந்த அசம்பவாதத்திற்கும் காரணமாகவில்லை. ஆனால் இன்று கரூரில் ஏற்பட்ட நெரிசல் மிகப்பெரிய கூட்ட நெரிசலுக்கு காரணமாக மாறியது.

பல பெண்கள் குழந்தைகளுடன் விஜய்யை காண வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்களில் பலரும் இன்று உயிருடன் இல்லை.. ஒரு சில நிமிடங்களில் மூச்சுவிட முடியாமல் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் ரசிகர்கள் பலர் பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் ரசிகர்களை போல் கட்டுப்பாடு அற்றவர்களாக இருந்தததுதான் இந்த சம்பவத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் கடந்த முறை ஐபிஎல் போட்டியில் கோப்பை வாங்கியது. அப்போது சின்னசாமி ஸ்டேடியத்தில் விராட்கோலி மற்றும் கிரிக்கெட் வீரர்களை காண வெறித்தனமாக குறுகிய சாலையில் முண்டியடித்தனர். இந்த நெரிசலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதேபோன்று தான், விஜய் ரசிகர்கள் ஒரே நேரத்தில் விஜய்யை பார்க்க வெறித்தனமாக முண்டியத்துதான் இன்றைக்கு பல பெண்கள், குழந்தைகள் உயிரிழக்க காரணமாக அமைந்தது என்கிறார்கள் திமுகவினர்.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் கருப்பு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கும் போது, காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது இதுபோன்ற மோசனமான அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு தான். இந்த நெரிசல் எதார்த்தமாக நடந்த கசப்பான சம்பவம் என்றாலும், விஜய் கூடுதல் பொறுப்புனர்வுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், விஜய் ரசிகர்களும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகிறார்கள். இனி வரும் காலங்களில் அரசியல் பிரச்சாரங்கள் எப்படி நடக்கககூடாது என்பதற்கு உதாரணமாக இந்த கரூர் நிகழ்வு கருப்பு நிகழ்வாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+