ஆறாத வடுவாக கரூர் துயரம்.. விறுவிறு விசாரணையில் சிபிஐ! உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை!
கரூர்: கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணம், இன்னும் பல குடும்பங்களின் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளது. இந்த சம்பவம் பல நாட்களாகிவிட்ட நிலையில், விஜய் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். இந்நிலையில் இச்சம்பவம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிபிஐ அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 4வது நாளாக விசாரித்துள்ளனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் கடுமையாக காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டன. முதல் கட்டமாக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை
அந்த குழுவினர் அக்டோபர் 5ஆம் தேதி கரூருக்கு வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மின்வாரியம், மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். தவெக நிர்வாகிகள் சிலரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். ஆனால், அக்டோபர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முழுமையாக சிபிஐக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பின்னர் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் ஏடிஎஸ்பி முகேஷ் குமார், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர் கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி ஆவணங்கள், சாட்சியங்கள் மற்றும் சம்பவத்திற்கு தொடர்புடைய அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
கரூர் சம்பவம்
சிபிஐ குழு முதலில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை நடத்தியது. பின்னர் அவசர ஊர்தி ஓட்டுனர்கள், அருகிலுள்ள வணிகஸ்தாபன உரிமையாளர்கள், சம்பவ நேரம் காவல் பணியில் இருந்த போலீசார், துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்ட நெரிசலில் காயமடைந்த பலரிடமும் சிபிஐ தனியாக பேசி விவரங்கள் பதிவு செய்தது. இதனுடன், தவெக பொதுச்செயலர் புச்சி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் மற்றும் மாநகரப் பொறுப்பாளர் மாசி பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ முன்னிலையில் விளக்கமளித்தனர்.
சிபிஐ அதிகாரிகள்
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பலர் அந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்ததால், குடும்பத்தினர் இன்னும் மன உளைச்சலில் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த குடும்பங்களை வரவழைத்து, சம்பவ இடத்துக்கு எப்படி சென்றனர், யாரின் அழைப்பைத் தொடர்ந்து கூட்டத்துக்கு வந்தனர், உயிரிழந்த உறவினரின் தகவல் எப்போது எப்படித் தெரிந்தது என விரிவாக கேட்டறிந்து வருகின்றனர்.
ஆரம்ப காரணம் என்ன?
தொடர்ந்து சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இந்த விசாரணை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த விசாரணையில், ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் மற்றும் மனைவியை இழந்த ஆனந்தஜோதி, கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த கோபி, சரஸ்வதி நகரை சேர்ந்த ஞானம்மாள் ஆகியோரும் சிபிஐ முன்னிலையில் விளக்கமளித்தனர். சம்பவத்தின் ஆரம்ப காரணம் என்ன என்பது குறித்தும் சிபிஐ கவனம் செலுத்தி வருகிறது. கூட்டத்தின் போது சில தொண்டர்கள் மரம் ஒன்றின் மீது ஏறியதால் கிளை முறிந்து விழுந்தது. இதுவே ஆரம்பநிலையாக கூட்டத்தில் பீதி பரவ காரணமாக இருந்தது என்ற தகவல்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த கோணத்தில் வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
“அந்த தகுதி மட்டும் போதுமா?.. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?” விஜய் மீது சேரன் தாக்கு! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications