விஜய் மேலே தப்பில்லை.. ஒரு போலீஸ் கூட ஸ்பாட்டில் இல்லையாம்! கரூரில் மகனை இழந்த பெண் வேதனை
கரூர்: ‛‛விஜயை பார்க்க வந்த என் 13 வயது பையன் இறந்துவிட்டான். 50 பேர் மீது 50 பேர் விழுந்து கிடந்தார்கள். அவன் நின்ற இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை இழந்து போய் நிற்கிறோம். நாங்கள் விஜய் சார் மீது எந்த குறையையும் சொல்ல வேண்டாம். செந்தில் பாலாஜி சார் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சிஎம் சார் எங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று கூட்ட நெரிசலில் 13 வயது மகனை பறிகொடுத்த பெண் கலங்கினார்.
விஜய் சார் மீது விஜய் பேசியபோது எல்லோரும் தூரமாக தான் நின்றார்கள். பவர் கட் ஆனது. விஜய் பேசுவது கேட்கவில்லை. இதனால் கொஞ்சம் முன்னோக்கி செல்வோம் என்று நகர்ந்தனர். ஆர்வமாக முன்னோக்கி சென்றதால் நெரிசல் ஏற்பட்டது'' என்று மயங்கிய பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.
6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் கதறி வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் 13 வயது மகனை இழந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛எங்க பையன் இறந்துவிட்டான். விஜயை பார்க்க வந்தான். அவன் நின்ற இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. 50 பேர் மீது 50 பேர் விழுந்து கிடந்தாங்க. யாரும் யாரையும் தூக்கவில்லை. ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை? அதற்கு எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. நாங்கள் இருந்த இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. நீங்கள் ஏன் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை இழந்து போய் நிற்கிறோம். நாங்கள் விஜய் சார் மீது எந்த குறையையும் சொல்ல வேண்டாம். செந்தில் பாலாஜி சார் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சிஎம் சார் எங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று கலங்கினார்.
-
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி!












Click it and Unblock the Notifications