"கல்யாண குயின்".. 30 ஆண்களை "கிளீன் போல்டாக்கிய" பெண்.. நடுவில் அடிபட்ட"மாஜி" பேர்.. அதிர வைத்த அழகி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரை சேர்ந்த சவுமியா என்ற பெண் 30 ஆண்களை ஏமாற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் உள்ள ஆதிவிநாயகர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சவுமியா. இவர் தனது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

சில வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்த நிலையில், கணவனுடன் ஏற்பட்ட மோதலால் அவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார் சவுமியா. அதோடு இரண்டாவது திருமணம் செய்யவும் தயாராகி வந்தார்.

தனது ஏரியாவில் இருந்த தெரிந்த ஆட்களிடமும் கூட தான் இரண்டாவது திருமணம் செய்ய போகும் விஷயத்தை சொல்லி இருக்கிறார் சவுமியா.

கரூர் பெண்

கரூர் பெண்

எனக்கு உங்களுக்கு தெரிஞ்ச ஆண் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து இருக்கிறார். இதனை நம்பி பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர்.. தனக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் என்பவரை சவுமியாவிடம் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து சவுமியா - சிவக்குமார் இருவரும் நட்பாக பழகி உள்ளனர். சிவக்குமாரிடம் தனக்கு திருமணம் ஏற்கனவே ஆகிவிட்டது என்பதை மட்டும் சொன்ன சவுமியா மற்ற விஷயங்களை எல்லாம் மறைத்து உள்ளார்.

அழகி

அழகி

முக்கியமாக தான் வங்கியில் மேனேஜராக இருப்பதாகவும் பொய் சொல்லி இருக்கிறார். இது போக தனக்கு ஒரு மாஜி அமைச்சரை தெரியும் என்றும் சவுமியா பொய் சொல்லி இருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த அரசியல்வாதியிடம் சொன்னால் உனக்கு வேலை கிடைக்கும். ஆனால் அதற்கு கொஞ்சம் செலவு ஆகும் என்று கூறி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை சிவகுமாரிடம் சவுமியா வாங்கி உள்ளார். சிவக்குமாரும் இந்த பணத்தை சவுமியாவிடம் கொடுத்துள்ளார்.

சிவகுமார்

சிவகுமார்

அதோடு சிவகுமாருக்கு நெருக்கமான இன்னும் சிலர் சவுமியாவிடம் வேலை கேட்டுள்ளனர். சுமார் 20 பேர் சவுமியாவிடம் வேலைக்கு சிபாரிசு கேட்டுள்ளனர். அவர்களிடம் எல்லாம் தலா 50 ஆயிரம் வீதம் வாங்கி, 10 லட்சம் ரூபாயை பெற்று இருக்கிறார் சவுமியா. இது போக கரூரில் ஒரு ஏரியாவிற்கு கூட்டி சென்று, பங்களாவை காட்டி இதுதான் என் வீடு.. ஆனால் நான் டைவஸ் செய்துவிட்டதால் வீட்டில் இருந்து என் பெற்றோர் துரத்திவிட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

சவுமியா

சவுமியா

இந்த நிலையில்தான் சவுமியா பணம் வாங்கியும் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்காத காரணத்தால் சிவக்குமார் சந்தேகம் அடைந்து உள்ளார். இதையடுத்து லேசாக சந்தேகம் வரவே, அந்த பெண் மற்றும் அவர் காட்டிய பங்களாவின் புகைப்படங்களை நண்பரிடம் கொடுத்து விசாரிக்க சொல்லி இருக்கிறார். அதில்தான் சவுமியாவிற்கும் அந்த வீட்டிற்கும் தொடர்பே இல்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் சவுமியா வங்கியில் வேலை பார்க்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இதில் இன்னொரு ட்விஸ்ட் என்றால், சிவக்குமார் நேரடியாக அந்த பங்களாவில் போய் விசாரித்ததில், அந்த வீட்டு உரிமையாளரும் சவுமியாவிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்துள்ளது. இப்படி மொத்தமாக 22 ஆண்களிடம் பணம் வாங்கி சவுமியா ஏமாற்றி உள்ளார். இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சென்று, சவுமியாவை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை உடனே போலீசார் கைது செய்தனர்.

கைது

கைது

அதோடு அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே அவருக்கு 8 ஆண்களுடன் திருமணம் நடந்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து சவுமியா பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது போக சிவக்குமாரை சில நாட்களில் திருமணம் செய்ய அவர் திட்டமிட்டதும், அதற்கு அடுத்த வாரம் வேறு ஒரு ஆணை திருமணம் செய்வதாக கூறி அவரிடம் பணம் வாங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 30 ஆண்களிடம் இவர் பணம் வாங்கி ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+