Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் ஜோதிமணியா? திமுகவிடம் போராடி பெற்ற கரூரில் காங்கிரஸ் ஜெயிக்குமா? லேசா புகையுதே! களநிலவரம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: வரும் லோக்சபா தேர்தலில் திமுக தான் இந்த முறை போட்டியிடும் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதியின் வேட்பாளராக யார் நிறுத்தப்பட உள்ளார்? மீண்டும் கரூரில் காங்கிரஸ் வெல்லுமா? தொகுதி நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதுதவிர புதுச்சேரி தொகுதியும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election 2024 What is the history of Karur Parliament seat and Is Jothimani will win again in this constituency

இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 இடங்களில் களமிறங்க உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் கரூர் லோக்சபா தொகுதியில் திமுக போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. இதனால் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. கரூருக்கு பதில் வேறு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

ஆனால் இன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பட்டியலில் கரூரும் இடம்பெற்றிருந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது கரூர் லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கரூர், கிருஷ்ணநாராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதியாக உள்ளன.

இதில் விராலிமலையை தவிற பிற 5 தொகுதிகளிலும் திமுகவினர் தான் எம்எல்ஏவாக உள்ளனர். கரூரில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இது அவரது சொந்த மாவட்டம் என்பதால் அவரது குடும்பத்தினர் அல்லது அவரது ஆதரவாளர்களின் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியை தக்க வைத்துள்ளது.

இந்த கரூர் தொகுதியை கண்டிப்பாக திமுகவிடம் பெற்றுவிட வேண்டும் என்று சிட்டிங் எம்பி ஜோதிமணி முயற்சித்தார். ஜோதிமணி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி திமுக தலைமையை சமாதானப்படுத்தி கரூரை மீண்டும் தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மீண்டும் கரூர் தொகுதியில் ஜோதிமணி எம்பி தான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

கரூர் தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வாக்கு சதவீதம் உள்ளது. கடந்த 1957 ம் ஆண்டு முதல் 2019 வரை மொத்தம் 16 லோக்சபா தேர்தலை கரூர் தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1957 காங்கிரஸின் பெரியசாமி கவுண்டர், 1962ல் ராமநாதன் செட்டியார், 1967 ல் சுதந்திர கட்சியின் முத்துசாமி கவுண்டர் 1971, 1977 ல் காங்கிரஸின் கோபால், 1980, 84ல் ஏஆர் முருகையா, 1989 ல் அதிமுகவின் எம் தம்பிதுரை 1991ல் அதிமுகவின் முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன்பிறகு 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கே நடராயனும், 1998 ல் அதிமுகவின் எம் தம்பிதுரை, 1999ல் எம் சின்னசாமி, 20004ல் திமுகவின் கேசி பழனிசாமி வெற்றி பெற்றனர். அதன்பிறகு 2009, 2014 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக சார்பில் தம்பிதுரை வெற்றி பெற்றார்.

2019ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். இவர் சிட்டிங் எம்பியாக இருந்த எம் தம்பிதுரையை வீழ்த்தினார். ஜோதிமணி 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 ஓட்டுகள் பெற்ற நிலையில் எம் தம்பிதுரை 2,75,151 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் கரூர் தொகுதியில் 4 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பிதுரையை, ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, அதிமுக சார்பில் தம்பிதுரை இந்த தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது ஜோதிமணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும். மேலும் உள்ளூர் திமுக தலைவர்கள் கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக திமுக தலைமைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் வழங்கப்பட்டுள்ளதால் அந்த நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் அதிருப்தியாளர்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஜோதிமணி எம்பிக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கரூர் தொகுதியில் இந்த முறை லோக்சபா தேர்தல் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+