பிளஸ் டூ பையனுடன்.. கொந்தளித்த குடும்பம்.. உயிரையே விட்ட காதலன்.. பெண்ணின் உயிர் ஊசல்..!

விஷம் குடித்த காதலன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்

Subscribe to Oneindia Tamil

கரூர்: வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவும், காதலர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டனர்.. காதலன் வயசு 18.. காதலியின் வயசு 20.. இதில் காதலன் இறந்துவிட்டார்.. காதலியின் உயிர் ஊசலாடுகிறது.. இப்படி ஒரு சோகம் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது!

வெள்ளியணை அருகே உள்ளது கத்தாளபட்டி என்ற காட்டுப்பகுதி.. இங்கு நேற்று மதியம் ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்துள்ளனர்..

Lovers attempts suicide near Karur and youth died

இதனை அந்த வழியாக சென்ற மக்கள் பாரத்துவிட்டு, உடனடியாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

ஆனால், அந்த இளைஞர் சடலமாக கிடந்தார்.. அவரது வாயில் நுரை தள்ளி கிடந்தது.. அவருக்கு பக்கத்திலேயே ஒரு இளம்பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.... இவர்களுக்கு பக்கத்தில் 2 விஷ டப்பாக்கள் காலியாக கிடந்தன.. அது பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்கள்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... இறந்த இளைஞரின் சடலத்தை கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. பின்னர் விசாரணையையும் போலீசார் துவக்கினர்.. இறந்துபோன நபர்களின் செல்போனை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்பது தெரியவந்தது..

தாங்கள் விஷம் குடித்த விவரத்தை 2 பேருமே தங்கள் வீடுகளுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி வைத்துள்ளனர்.. அதற்குள் இந்த செமேஜ் பார்த்துவிட்டு, இரு குடும்பத்தினரும் அலறி அடித்து கொண்டு வந்தனர்.. போலீசார் நடத்திய விசாரணையில், விஷம் குடித்து உயிரிழந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கன்னிமேய்க்கான்பட்டியை சேர்ந்த அஜீத் என்பது தெரியவந்துள்ளது.. 18 வயசுதான் ஆகிறதாம்.. பிளஸ் 2 முடித்துள்ளார்.. மேற்கொண்டு எதையும் படிக்காமல், கூலி வேலைக்கு போய் வந்துள்ளார்..

அதே பகுதியை சேர்ந்தவர்தான் அந்த இளம்பெண்.. பெயர் சிவரஞ்சனி.. 20 வயதாகிறதாம்.. கரூரிலுள்ள ஒரு தனியார் காலேஜில் 3-ம் வருடம் படித்து வந்துள்ளார்.. இவர்கள் 2 பேருமே சொந்தக்காரர்கள்தானாம்.. 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.. விஷயம் சிவரஞ்சனி வீட்டுக்கு தெரிந்துள்ளது.. வயசு குறைவான பையனுடன் காதலா? என்று கொந்தளித்துள்ளனர்.. மேலும் வேறு இடத்திலும் சிவரஞ்சனிக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.. அதனால்தான், காதலர்கள் 2 பேருமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளனர்..

ஆனால், செத்தால் கணவன் - மனைவியாகத்தான் சாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.. அதற்காக மணவாடி கிராமம் கத்தாளபட்டியில் உள்ள அரசமரத்தான் கோவிலுக்கு வந்தனர்.. மஞ்சக் கயிற்றில், ஒரு துண்டு மஞ்சளை கட்டி கல்யாணமும் செய்து கொண்டனர்..!

அப்படியே கொஞ்ச தூரம் நடந்து சென்றனர்.. அங்கே ஒரு தோட்டத்தில் பாழடைந்த வீடு ஒன்று இருக்கிறது.. அது ஒரு மறைவான பகுதி.. அங்குதான் ஆளுக்கு ஒரு டப்பா விஷத்தை குடித்துவிட்டனர்... இதில் அஜீத் ஸ்பாட் அவுட் ஆகிவிட்டார்.. அது பவர்புல்லான விஷப்பூச்சியாம்.. இப்போது சிவரஞ்சனி சீரியஸாக இருக்கிறாராம்.. சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது.. இரு பிள்ளைகளையும் நினைத்து, அந்த குடும்பத்தினர் கதறி கொண்டு இருக்கிறார்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+