4 மணி நேரமா காத்திருக்கோம்! செந்தில்பாலாஜியை பற்றி உதயநிதியிடம் பிராது! அரசு விழா ருசிகரம்!
கரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடந்த ருசிகர நிகழ்வு.
கரூர்: கரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகளை பார்த்து நீங்கள் எல்லாம் எத்தனை மணி நேரம் காத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை சிரித்துக் கொண்டே கேட்டார்.
அதற்கு பதிலளித்த பயனாளிகள் 4 மணி நேரமாக என கோரஸாக கூறியதுடன் 4 விரல்களையும் காட்டி பதிலளித்தனர்.
மொத்தத்தில் 10.30 மணிக்கு நடக்கும் விழாவுக்கு காலை 6.30 மணிக்கெல்லாம் தங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்து வந்துவிட்டார் என்பதை தான் அவர்கள் இவ்வாறு அமைச்சர் உதயநிதியிடம் போட்டுக் கொடுத்தனர்.

கரூரில் உதயநிதி
நேற்று முழுவதும் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவு கரூர் சென்றடைந்தார். இன்று அங்கு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கம் போல் தனது பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்து அசத்தியிருந்தார். பல நூறு வாழைமரங்களை கொண்டு வந்து கட்டியும், புதிதக தார் சாலை அமைத்தும் அதிமுகவில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு எந்தளவுக்கு உற்சாகமிகு வரவேற்பு கொடுத்தாரோ அதில் இம்மியளவும் குறைவில்லாமல் உதயநிதிக்கும் கொடுத்திருந்தார்.

வரவேற்பு பேச்சு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேசிய கரூர் மேயர் வழக்கம் போல் தடுமாற்றத்துடனும், பதற்றத்துடனும் பேசிவிட்டு அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர், உதயநிதி முன்னிலையிலேயே கரூர் மாவட்ட மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அண்ணன் செந்தில்பாலாஜி என புகழாரம் சூடினார். இதனிடையே வரவேற்பு உரையை தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , எடுத்த எடுப்பிலேயே பயனாளிகளை பார்த்து நீங்கள் எல்லாம் எத்தனை மணி நேரம் காத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை சிரித்துக் கொண்டே கேட்டார்.

4 மணி நேரம்
அதற்கு பதிலளித்த பயனாளிகள் 4 மணி நேரமாக என கோரஸாக கூறியதுடன் 4 விரல்களையும் காட்டி பதிலளித்தனர். மொத்தத்தில் தங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி 4 மணி நேரம் காக்க வைத்துவிட்டார் என்பதை தான் அவர்கள் இவ்வாறு அமைச்சர் உதயநிதியிடம் போட்டுக் கொடுத்தனர். இதனிடையே சிரித்துக்கொண்டே அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, கவலைப்படாதீங்க, நான் ரொம்ப நேரம் பேசமாட்டேன். சீக்கிரம் பேசு முடிச்சுடுறேன் எனக் கூறி அந்த தருணத்தை கலகலப்பாக்கினார்.

பேப்பரை பார்க்காமல்
அதேபோல் சீக்கிரமாகவும் உதயநிதி பேசி முடித்துவிட்டார். பயனாளிகள் மத்தியில் பேசும் போது பேப்பரை பார்த்து பேசாமல் மிகவும் இயல்பாக, ''எல்லோரும் எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா, நீங்க நல்லா இருந்தாதான் நான் நல்லா இருக்க முடியும்'' என்றெல்லாம் மிகவும் ஜோவியலாக பேசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications