40 வருச அரசியல்ல கேள்வி பட்டதே இல்ல.. செந்தில் பாலாஜியால் ஷாக்கான ஒபிஎஸ்
கரூர்: ஒரு கட்சி கூட்டத்துக்கு போக வேண்டாம் என பணம் கொடுத்ததாக 40 வருட அரசியலில் கேள்விபட்டதே இல்லையென என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூர் மாவட்டம் புகளூர் நான்கு ரோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண் பன்னீர்செல்வம், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழகம் என்று பெருமிதம் தெரிவித்தார்.
அதிமுகவிற்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில, "அதிமுகவின் கூட்டத்திற்கு போகாதே என்று சொல்லி திமுகவின் செந்தில் பாலாஜி பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள். நான் 40 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன், கூட்டத்துக்கு போ என்று சொல்லி பணம் கொடுப்பாங்க என்று கேட்டு இருக்கிறேன்.
ஆனால் கூட்டத்திற்கு போக வேண்டாம் என பணம் கொடுக்கிறார் என்றால், நான் இப்போது தான் கேள்வி படுகிறேன். செந்தில் பாலாஜி அப்படி எவ்வளவு பணம் தான் வைத்திருக்கிறார். இந்த தேர்தலுடன் கட்சி தாவி தாவி செல்லும் செந்தில் பாலாஜிக்கு முடிவு கட்ட வேண்டும். அவருக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது" இவ்வாறு கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications