கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. அற்புதம்.. கருணாநிதி மகன் என்பதை நிரூபித்த ஸ்டாலின்.. என்னா பேச்சு!

Google Oneindia Tamil News

கரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கரூரில் ஆற்றிய உரைபற்றிதான் சிலாகித்து கிடக்கிறார்கள் உடன் பிறப்புகள்.

ஆம்.. திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி, கட்சி நிறுவனர் அண்ணா ஆகியோரின் பேச்சை கேட்பதற்காகவே கூட்டம் கூடும். பேச்சாலே நாட்டை வென்றவர்கள் என்ற அடைமொழிக்கு உரியவர்கள் இவர்கள்.

ஆனால், கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அந்த அளவுக்கான பேச்சாளரா என்றால், இல்லை என்று அவரே ஒப்புக்கொள்வார்.

தன்னடக்கம்

தன்னடக்கம்

திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலினே இதை குறிப்பிட்டு பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். ஆனால், நேற்று ஸ்டாலின் பேச்சை கேட்டவர்கள் ஸ்டாலினே சொன்னாலும் இனி அவரது பேச்சு திறமை கருணாநிதிக்கு குறைந்தது இல்லை என்று, ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

கரூர் விழா

கரூர் விழா

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உட்பட அமமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 30,430 பேர் திமுகவில் இணையும் விழா கரூர், திருமாநிலையூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், தனது உரையின்போது மோடி அரசு, மாநில அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார்.

செந்தமிழில் கலக்கல்

செந்தமிழில் கலக்கல்

ஆனால், ஸ்டாலின் தனது உரையில், யாருடைய இயக்கத்திற்கு வந்துள்ளீர்கள் தெரியுமா என்று அறிஞர் அண்ணா, திமுகவை துவக்கியது குறித்து பேசினார். உளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே.. என்று செந்தமிழில் கூட்டத்தினரை பார்த்தபடி ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு கூட்டத்தில் கர ஒலி அடங்க வெகு நேரமாயிற்று.

கூட்டத்தை பார்த்து பேசிய ஸ்டாலின்

ஸ்டாலின் தனது பேச்சின் ஒரு சில நொடிகள் மட்டுமே பேப்பரை பார்த்து பேசினார். மற்றபடி கடினமான வார்த்தைகளையும், அலங்கார வார்த்தைகளையும் கூட்டத்தை பார்த்தே பேசி கரஒலியை அள்ளினார். ஸ்டாலின் பேச்சை பாராட்டி நெட்டிசன்கள் அதை வைரலாக்கி வருகிறார்கள்.

English summary
DMK president MK Stalin got applause while addressing the gathering in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X