கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைத்தேர்தல் 22-லும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே நபர் செந்தில் பாலாஜி- பொன்முடி

Google Oneindia Tamil News

Recommended Video

    22 சட்டசபை இடைத்தேர்தல்களிலும் திமுக வெற்றி- பொன்முடி-வீடியோ

    அரவக்குறிச்சி: 22 சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் ஒரே வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி என முன்னாள் அமைச்சர் பொன்முடி புகழாரம் சூட்டினார்.

    அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக அரவக்குறிச்சி பகுதியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்துவிட்டு ஊர்வலமாக அரவக்குறிச்சி கடைவீதி முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஏராளமான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

    இடைத்தேர்தல்

    இடைத்தேர்தல்

    வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்:

    திமுக தலைவர் மு க ஸ்டாலின் நீதிமன்றம் மூலமும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியும் அரவக்குறிச்சி உட்பட நான்கு சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    அதன் பேரில் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திமுக கூட்டணி சார்பில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார்.

    அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தல்... செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல்அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தல்... செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல்

    பொறுப்பு

    பொறுப்பு

    22 சட்டமன்ற இடைத் தேர்தல்களும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க கூடிய தேர்தலாகும். தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

    பொன்முடி

    பொன்முடி

    திமுக ஆட்சி அமைந்ததும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக செந்தில் பாலாஜி அங்கம் வகிப்பார் என செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    English summary
    EX Minister Ponmudi says that DMK Candidate Senthil Balaji will be one among all the candidates who win in highest margin in all 22 constituencies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X