அங்க மூணாவதா ஒருத்தன் இருப்பானே.. தம்பி மூலம் செந்தில் பாலாஜி செக்..விஜய பாஸ்கருக்கு ஷாக்
கரூர்: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாட்டை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் பாஜகவுக்கு எதிராக செந்தில் பாலாஜி களமாடி வரும் நிலையில், கரூரில் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக அசோக் களமிறக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு மாற்று வேட்பாளராகவும், கோவையில் செந்தில் பாலாஜிக்கு மாற்று வேட்பாளராகவும் அவரின் தம்பி அசோக் குமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி கோவையில் திமுக வெற்றிக்காக களமிறங்கியுள்ள நிலையில், அவரின் சகோதரர் அசோக் கரூரில் திமுக வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றி வருகிறார்.

செந்தில் பாலாஜி தம்பி
கடந்த தேர்தலில் அதிமுக விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி குடைச்சல் கொடுத்த நிலையில், இப்போது கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் தொடங்கிய அசோக்குமாருக்கு, ஆரத்தி எடுத்து திமுகவினர் வரவேற்பளித்தனர்.
விஜயபாஸ்கருக்கு சவால்
"அண்ணன் செந்தில் பாலாஜி தோல்வி பயத்தால் கோவை சென்றார் என்பது தவறு. ஏற்கனவே கரூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் எதற்காக அங்கிருந்து பயப்பட வேண்டாம். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக அதை சொல்கிறார்கள். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் செந்தில் பாலாஜி தான் என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.
கனவு நிறைவேறாது
அதிமுக வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியால் என்னை எதிர்க்க முடியவில்லை என்கிறார். 2021 தேர்தலிலேயே உன்னை (விஜயபாஸ்கர்) தோற்கடித்தவர் என்பதை மறக்க கூடாது. தோற்று போனவர்கள் தான் பயப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் எதற்கு பயப்பட வேண்டும். அப்போதே நீ தோல்வியடைந்த வேட்பாளர். அவர் இல்லாத தைரியத்தில் இப்போது வெற்றி பெற்று விடலாம் என்று வாக்கு சேகரிக்கிறார். அவரின் கனவு நிறைவேறாது" என்றார்.












Click it and Unblock the Notifications