தவெக நிர்வாகி தலையில் விழுந்த கொடி கம்பம்.. கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத்! சலசலப்பு
கரூர்: கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த கட்சிக் கொடி கம்பம், மேடையில் நின்றுகொண்டிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார். விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடர்ந்து உரையாற்றியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கரூர் 80 அடி ரோட்டில் தவெக 3ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டம் தொடங்கும்போது மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், ஜெகதீச பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, மழை குறுக்கிட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலியை தலைக்கு பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். இந்த சூழலில், மேடையின் வலது புறம் நடப்பட்டிருந்த தவெக கொடிக் கம்பம் மின் கம்பி மீது உரசியதில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அந்தக் கொடிக்கம்பம் சாய்ந்து, மேடையில் நின்றிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது விழுந்தது.
ஜெகதீஷ் பாண்டியின் நெற்றியில் கொடிக் கம்பம் விழுந்தது. இதில் அவர் லேசான காயமடைந்தார். பின்னர் உடனே ஜெகதீச பாண்டியன் தனது காரில் ஏறி கிளம்பிச் சென்றுவிட்டார். விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நாஞ்சில் சம்பத் நின்று பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு அருகில் தான் ஜெகதீச பாண்டியன் நின்று கொண்டிருந்தார். அவர் மீது கொடிக் கம்பம் விழுந்த நிலையில், மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் பதறினர். ஆனால், நாஞ்சில் சம்பத் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் 72 நாட்கள் வீட்டை விட்டே வெளியில் வராமல் முடங்கினார் அக்கட்சியின் தலைவர் விஜய். கடந்த 2 மாதங்களாகத்தான் ஈரோடு, சேலம், வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். இந்நிலையில் தற்போது, மீண்டும் கரூரில் நடந்த கூட்டத்தில் கட்சிக் கொடி சரிந்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications